கார்பன் மோனாக்சைடு வெளியேற்றம்… 5 வயது குழந்தை உட்பட மூன்று பேர் உயிரிழப்பு ..!
ஜம்மு-காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தின் பட்டன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் ஐந்து வயது குழந்தை உட்பட மூன்று பேர் கொண்ட குடும்பத்தினர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
மூவரும் தங்கள் வீட்டிற்குள் மயக்க நிலையில் காணப்பட்ட பின்னர், அவர்களை உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர், இருப்பினும், அவர்கள் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து உள்ளூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
முதற்கட்ட விசாரணையின்படி, அறை ஹீட்டரிலிருந்து வெளிப்படும் கார்பன் மோனாக்சைடு காரணமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு மூவரும் உயிரிழந்துள்ளனர் என்பது தெரியவந்துள்ளது.