மத்திய அரசிற்கு ஜிஎஸ்டி வரி பற்றி பரிந்துரை செய்வதற்காக மத்திய மாநில வருமான வரித்துறை அதிகாரிகள் சிலர் ஒன்றிணைந்து ஜிஎஸ்டி வரி பரிந்துரைக் குழுவாக ஃபிட்மென்ட் (fitment panel ) செயல்பட்டு வருகிறது. இது ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு ஜி.எஸ்.டி வரி விதிப்பு பற்றிய ஆலோசனைகளை வழங்கி வருகிறது.
இந்தக் குழுவானது அண்மையில் கார்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி குறித்து ஜிஎஸ்டி கவுன்சிலுக்கு பரிந்துரை செய்துள்ளது. அந்த பரிந்துரையில் கார்களுக்கு தற்போது விதிக்கப்பட்டு வரும் 28 சதவீத வரியை 18 சதவீதமாக குறைக்க சொல்லும் பரிந்துரையை ஏற்க வேண்டாம். அப்படி வரியை குறைத்தால், அரசிற்கு வருவாய் வெகுவாக பாதிக்கப்படும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் பொருளாதார மந்தநிலை காரணமாக கார்களின் விற்பனை மிகவும் பாதிப்படைந்துள்ளது என்பதனால் ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாக குறைக்க கார் நிறுவனங்கள் மத்திய அரசிற்கு பரிந்துரை செய்து இருந்தன.
தற்போது அந்த பரிந்துரைக்கு எதிராக ஜிஎஸ்டி பரிந்துரை குழுவான ஃபேட்மென்ட் குழு, மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்நிலையில் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டமானது மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் உடன் நாளை கோவாவில் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் ஜிஎஸ்டி பற்றி விவாதிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
டெல்லி : கடந்த 2 நாட்களாக நாடாளுமன்ற வளாகம் மிக பரபரப்பாக இயங்கி வருகிறது. அதிலும் இன்று நாடாளுமன்ற வளாகத்தில்…
ஆத்தி மரத்தின் சிறப்புகளையும் அதன் ஆரோக்கிய நன்மைகளையும் இந்த செய்தி குறிப்பில் பார்க்கலாம். சென்னை : ஆத்தி மரத்தை இடிதாங்கி…
சென்னை : நாளை (டிசம்பர் 20) வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி, சூரி நடித்துள்ள விடுதலை படத்தின் 2ஆம் பாகம்…
சென்னை : காலகலப்பு திரைப்படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் நடிகர் நடிகர் கோதண்டராமன். இவர் கடந்த சில நாட்களாகவே உடல் நிலை…
டெல்லி : இன்று நாடாளுமன்ற வளாகமே பரபரப்புக்கு பஞ்சமில்லாமல் இயங்கி வருகிறது. ஒருபக்கம், அம்பேத்கரை அமித்ஷா அவமதித்துவிட்டார் என காங்கிரஸ்…
ஆருத்ரா தரிசனம் என்றால் என்ன அதன் பலன்கள் மற்றும் சிறப்புகளை இந்த செய்து குறிப்பில் காணலாம் . சென்னை :சிவபெருமானுக்கு…