நொய்டாவில் ஜெய் ஸ்ரீராம் என கோஷமிட்டபடி கார் டிரைவரை கொலை செய்துள்ளனர்.
நொய்டாவில் உள்ள திரிலோக்புரியில் வாசிக்க கூடிய கார் டிரைவர் அப்தாப் என்பவரை ஜெய் ஸ்ரீராம் என்று கோஷம் இடுமாறு கட்டாயப்படுத்தி கொலை செய்துள்ளதாக அவரது 20 வயது மகன் முகமது சபீர் அவர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். சபீர் காவல் நிலையத்தில் அளித்துள்ள புகாரில், எனது தந்தை தனது பழைய வாடிக்கையாளர்கள் ஒருவரை புலந்த்ஷார் எனும் இடத்தில் நேற்று மதியம் 3 மணிக்கு இறக்குவதற்காக சென்றிருந்தார். இந்நிலையில் 7.30 மணி அளவில் அவர் என்னை அழைத்து தனது ஃபாஸ்ட்ராக்கை ரீசார்ஜ் செய்யுமாறு கூறினார்.
அதன் பின்பு சிறிது நேரத்திற்குப் பின் மீண்டும் எனக்கு அவரது தொலைபேசியில் இருந்து அழைப்பு வந்தது. அது ஒரு சுங்க சாவடி அருகில் இருந்து வந்தது என நான் நினைக்கிறேன், அப்பொழுது வந்த ஆண்கள் மீது சந்தேகம் வந்ததன் பேரில் எனது தந்தை எனக்கு போன் செய்து தனது சட்டைப்பையில் வைத்து இருக்கலாம் என இறந்தவரின் மகன் சபீர் அவர்கள் குறிப்பிட்டுள்ளார். அப்பாவுக்கு ஆபத்து இருப்பதாய் உணர்ந்த நான் அந்த அழைப்பை பதிவு செய்தேன். மேலும் அப்பா தனது சொந்த வண்டியில் இருக்கும் பொழுது யாரோ இருவர் வந்து ஜெய் ஸ்ரீராம் எனம் அவரை கூறச் சொல்லி கட்டாயப்படுத்தி கொலை செய்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனையடுத்து போலீசார் தேடி பார்த்த பொழுது அதன் பின் சொந்த வண்டியின் பக்கத்திலேயே அவர் கட்டப்பட்டு உயிரிழந்திருப்பத்தை கண்டுபிடித்துள்ளனர். குற்றம் சாட்டப்பட்டவர் குடிபோதையில் இருந்ததாகவும், வண்டியை திருடுவதற்காக அவரை கொலை செய்துள்ளதாகவும் போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். 302 கொலை வழக்கின் கீழ் வடக்கு காவல் நிலையத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
சென்னை : இசைஞானி இளையராஜா, தனது இசை மூலம் பல கோடி ரசிகர்களின் மனதை தொட்டவர் என்று சொல்லி தான் தெரியவேண்டும்…
சென்னை : நேற்று கும்பகோணத்தில் வன்னியர் சங்கம் சார்பில் மாநாடு நடைபெற்றது. அந்த மாநாட்டில் " சென்னையில் இருந்து வந்த வேட்பாளரை…
டெல்லி : மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின்77-வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. அவருடைய பிறந்த நாளை முன்னிட்டு…
ராவல்பிண்டி : 2025 சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இன்று நடைபெறும் போட்டியில் பங்களாதேஷ் அணியும், நியூசிலாந்து அணி ராவல்பிண்டி கிரிக்கெட்…
சென்னை : விடாமுயற்சி படத்திற்கு இப்படியா ஆகவேண்டும் என ரசிகர்கள் கவலைப்படும் விதமாக படம் நன்றாக இருந்தாலும் பெரிய அளவில் ரசிகர்களை…
சென்னை : சமீபகாலமாகவே சீமானின் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகும் நிர்வாகிகள் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே இருக்கிறது. குறிப்பிட்டு…