லாரி மீது மோதிய கார் : 18 பேர் உயிரிழப்பு; 5 பேர் படுகாயம்!
பனிமூட்டம் காரணமாக கார் ஒன்று கற்கள் சுமந்து நின்ற லாரி மீது மோதிய விபத்தில் 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
மேற்கு வங்க மாநிலத்தில் உள்ள நடியா எனும் மாவட்டத்தில்உள்ள ஹன்ஸ்காலி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் சாலையோரம் கற்களை சுமந்தவாறு லாரி ஒன்று நின்று கொண்டிருந்துள்ளது. அப்பொழுது அவ்வழியே வந்த கார் ஒன்று ஆட்டோ மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் 18 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.
மேலும் காயமடைந்தவர்கள் சக்தி நகர் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் இது குறித்து விசாரணை நடத்தியுள்ளனர். அப்பொழுது அடர்ந்த பனி மூட்டம் மற்றும் வாகனத்தின் அதி வேகம் காரணமாக தான் இந்த விபத்து ஏற்பட்டதாக தெரிவித்துள்ளனர்.