கேரளாவில் காரும் அரசு பேருந்தும் மோதி விபத்து! 5 மருத்துவ மாணவர்கள் பலி!

மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் 5 மருத்துவ மாணவர்கள் கார் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து மீது மோதியதில் உயிரிழந்தனர்.

Kerala Alappuzha Accident

கேரளா :  ஆலப்புழாவில் திங்கள்கிழமை இரவு நடந்த பயங்கர விபத்தில், 5 இளம் எம்பிஎஸ் மாணவர்கள் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நேற்று இரவு  7 எம்பிஎஸ் மாணவர்கள் காரில் கோச்சுக்கு ஆலப்புழா சாலை வழியாக சென்று கொண்டிருந்தபோது அதே பகுதியில் ரள மாநில சாலைப் போக்குவரத்துக் கழகம் (கேஎஸ்ஆர்டிசி) பேருந்தும் பயங்கரமாக  வேகத்தில் வந்து மோதியதில் விபத்து ஏற்பட்டது.

இந்த விபத்தில் கார் அப்பளம் போல நொறுங்கியது.விபத்தில் காரில் பயணம் செய்த 5 பேர் உயிரிழந்ததாகவும், பேருந்தில் பயணம் செய்தவர்களுக்கு எந்த காயமும் ஏற்படவில்லை என்பது முதற்கட்டமாக தெரியவந்துள்ளது.  இந்த சம்பவம் குறித்து போலீசார் கூறியதாவது ” இச்சம்பவம் திங்கட்கிழமை இரவு 10 மணியளவில் களர்கோடு அருகே  நடந்தது.

விபத்து ஏற்பட்ட இந்த காருக்குள் மொத்தம் 7  பேர் இருந்தனர், அவர்களில் 5 பேர் இறந்தனர்.  3  மாணவர்கள் சம்பவ இடத்திலே உயிரிழந்ததாகவும், மேலும் 2 பேர் படு காயங்களுக்கு ஆலப்புழா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தனர். மீதமுள்ள 2  மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், ஒருவரின் நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது எனவும் தகவல் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர்கள் ஆலப்புழா அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்ததும், அவர்கள் கண்ணூரைச் சேர்ந்த முஹம்மது அப்துல் ஜப்பார், லட்சத்தீவைச் சேர்ந்த முஹம்மது இப்ராஹிம், மலப்புரத்தைச் சேர்ந்த தேவானந்தன், ஆலப்புழாவைச் சேர்ந்த ஆயுஷ் ஷாஜி, பாலக்காட்டைச் சேர்ந்த ஸ்ரீதீப் என்பதும் தெரியவந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு கேரளா முதல்வர் பினராயி விஜயன் தனது முகநூல் பக்கத்தில் இரங்கலை தெரிவித்துள்ளார். அதில் ” ஆலப்புழா தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கல்லார்கோட்டில் கார் விபத்தில் மருத்துவ மாணவர்கள் 5 பேர் உயிரிழந்த சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. இறந்தவர்களுக்கு இரங்கலை தெரிவித்து கொள்கிறேன். அவர்களுடைய குடும்ப உறுப்பினர்களுக்கு ஆறுதல் தெரிவித்து கொள்கிறேன்” என கூறியுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்