லக்னோ-ஆக்ரா விரைவுச் சாலையில் கார் மோதிய விபத்தில் 5 பேர் பலி மற்றும் 3 பேர் காயமடைந்துள்ளனர்.
உத்தர பிரதேச மாநிலம், உன்னாவோவில் உள்ள ஆக்ரா-லக்னோ விரைவு சாலையில் கார் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் மூன்று பெண்கள் மற்றும் ஒரு பெண் குழந்தை உட்பட 5 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் மூன்று பேர் படுகாயமடைந்துள்ளனர். விபத்தில் காயமடைந்த மூவரும் அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஒரு குழந்தையின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் தனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்க மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல்துறை அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.
பலியானவர்கள் பாரபங்கி சித்ரகுப்த் நகர் பகுதியை சேர்ந்தவர்கள் என்றும் ஆக்ராவிலிருந்து லக்னோ நோக்கிச் சென்ற ஸ்விஃப்ட் டி-சையர் கார், பின்னால் வேகமாக வந்த வாகனம் மோதியதில், டிவைடரைத் தாண்டி, லக்னோவில் இருந்து வந்த மஹிந்திரா எக்ஸ்யூவி கார் மீது மோதி இந்த விபத்து நடந்ததாக போலீஸார் தெரிவித்தனர். அதிர்ஷ்டவசமாக SUV யில் இருந்தவர்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அவர் மேலும் கூறினார்.
சென்னை : வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாற வாய்ப்புள்ளதால் தமிழகத்தின் சில மாவட்டங்களில் இன்று கனமழைக்கு…
சென்னை : தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின், பிறந்தநாள் வரும் 27-ம்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடரானது அடுத்த ஆண்டு மார்ச்-15ம் தேதி தொடங்கி, மே-25ம் தேதி நிறைவடையவுள்ளது. 2 மாதம்…
பெர்த் : இந்தியா - ஆஸ்திரேலியா இடையே நடைபெற்ற பார்டர் கவாஸ்கர் தொடரின் முதல் டெஸ்ட் போட்டியில், ஆஸ்திரேலிய அணியை…
சென்னை : தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் பல பகுதிகளில் மழை பெய்து வருகின்றது. இந்த…
சென்னை :சிறகடிக்க ஆசை தொடரில் இன்றைக்கான எபிசோடில் அண்ணாமலையின் பேச்சால் எமோஷனல் ஆகும் மீனா.. ரோகிணியின் புதிய திட்டம்.. உதவி…