கார் விபத்து…அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய சந்திரபாபு நாயுடு.!

தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும், ஆந்திராவின் முன்னாள் முதல்வருமான சந்திரபாபு நாயுடு வந்த வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியதில் அதிஷ்டவசமாக தப்பினார்.
மூன்று தேசிய பாதுகாப்புக் காவலர் (என்.எஸ்.ஜி) பணியாளர்களுக்கு சிறு காயங்கள் ஏற்பட்டன, அதே நேரத்தில் அவர்கள் பயணித்த புல்லட் ப்ரூஃப் வாகனம் மோசமாக சேதமடைந்தது என கூறப்படுகிறது. விஜயவாடா-ஹைதராபாத் தேசிய நெடுஞ்சாலையில் (என்.எச் -65) சவுத்துப்பல் தொகுதியின் தண்டுமல்கபுரம் கிராமத்தில் நாயுடு தனது அமராவதி இல்லத்திலிருந்து ஹைதராபாத் திரும்பிக் கொண்டிருந்தபோது விபத்து ஏற்பட்டது.
சவுத்துப்பல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சி வெங்கண்ணா கூறுகையில், நாயுடு ஏழு வாகனங்களுடன் பயணம் செய்து கொண்டிருந்தார். அந்த ஏழு வாகனத்தில் மூன்று முன், மூன்று பின்னால் வந்து கொண்டு இருந்தது. நாயுடு கார் நான்காவது காரில் வந்துகொண்டு இருந்தார்.
திடீரென பசுமாடு ஒன்று காருக்கு குறுக்கே வந்ததை அடுத்து பாதுகாப்பு படையினர் சென்ற கார் பிரேக் போட்டு நிறுத்தப்பட்டது. இதனை அடுத்து பின்னால் வந்த கார்கள் ஒன்றன் பின் ஒன்றாக மோதியது.
இந்த விபத்தில் நான்காவது காரில் இருந்த நாயுடு காயமின்றி தப்பினார். ஆனால், சந்திரபாபு நாயுடு உடன் சென்ற மூன்று வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதியது. இரண்டாவது காரில் என்.எஸ்.ஜி.யின் மூன்று பாதுகாப்புப் படையினருக்கு சிறு காயங்கள் ஏற்பட்டதாகவும், அவர்கள் சேதமடைந்த வாகனத்தை கைவிட்டு மற்றொரு காரில் ஹைதராபாத்திற்கு புறப்பட்டனர் என்று அவர் கூறினார்.
லேட்டஸ்ட் செய்திகள்
LIVE : மும்மொழி விவகாரம் முதல்…மகா சிவராத்திரி கொண்டாட்டங்கள் வரை!
February 27, 2025
சின்ன டீம் கூடதான் விக்கெட் எடுப்பார் பெரிய டீம் கூட முடியாது! ரஷித் கானை விமர்சித்த இந்திய முன்னாள் வீரர்!
February 27, 2025
சினிமாவில் நடிச்சி சொத்து சேத்து வச்சிட்டு அரசியல் வராங்க! சிக தலைவர் திருமாவளவன் பேச்சு!
February 27, 2025
காலத்தால் அழியாத காதல் …15 ஆண்டுகளை கடந்த VTV…நடிகர் சிம்பு நெகிழ்ச்சி!
February 27, 2025