கேப்டன் வருண் சிங் தேசத்திற்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது – பிரதமர் இரங்கல்!
உயிரிழந்த கேப்டன் வருண் சிங் தேசத்திற்கு ஆற்றிய சேவையை மறக்க முடியாது என பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
நீலகிரி மாவட்டம் கடந்த 8 ஆம் தேதி நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா ராவத் மற்றும் ராணுவ வீரர்கள், விமானப்படை அதிகாரிகள் என 13 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 80 சதவீத தீ காயங்களுடன் உயிருடன் மீட்கப்பட்ட கேப்டன் வருண் சிங், பெங்களூருவில் உள்ள விமானப்படை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தற்பொழுது உயிரிழந்துள்ளார்.
கேப்டன் வருண் சிங் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து பிரதமர் மோடி அவர்கள் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கேப்டன் வருண் சிங் பெருமை, வீரத்துடன் சேவை செய்தவர் எனவும், அவரது மறைவால் நான் மிகுந்த வேதனை அடைந்துள்ளேன். அவர் தேசத்திற்கு ஆற்றிய சேவை என்றும் மறக்க முடியாது. அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். ஓம் சாந்தி என பதிவிட்டுள்ளார். இதோ அந்த பதிவு,
Group Captain Varun Singh served the nation with pride, valour and utmost professionalism. I am extremely anguished by his passing away. His rich service to the nation will never be forgotten. Condolences to his family and friends. Om Shanti.
— Narendra Modi (@narendramodi) December 15, 2021