கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் – லெப்டினன்ட் ஜெனரல் அருண்
குரூப் கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக உள்ளது என லெப்டினன்ட் ஜெனரல் அருண் தகவல்.
குன்னூர் அருகே ராணுவ ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் முப்படை தலைமை தளபதி பிபின் ராவத் உட்பட 13 பேர் உயிரிழந்த நிலையில், குரூப் கேப்டன் வருண் சிங் தீக்காயத்துடன் மீட்கப்பட்டு, பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்தில் ஈடுபட்ட மீட்புப்பணிகளுக்கும், உதவியர்களுக்கான பாராட்டு விழா வெலிங்டனில் உள்ள ராணுவ மையத்தில் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் கலந்துகொண்ட லெப்டினன்ட் ஜெனரல் அருண் விபத்து நடந்த பகுதியில் உதவியவர்களுக்கு, மீட்பணியில் ஈடுபட்ட காவல் அதிகாரிகளுக்கு ராணுவ சார்பில் பாராட்டு மற்றும் பரிசை வழங்கினார்.
இதன்பின் பேசிய லெப்டினன்ட் ஜெனரல் அருண், ஹெலிக்கப்படர் விபத்து மீட்புப் பணியின்போது அனைவரும் உதவி செய்தனர். உதவாதவர்கள் என யாரும் இல்லை. விபத்து நடந்த 10 நிமிடத்திலிருந்து அப்பகுதி மக்கள், முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் பணிபுரிந்தனர்.
நெருக்கடி நேரத்தில் உதவிய அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாகவும், அசாதாரண சூழலை ஊடகங்கள் பொறுப்புடன் கையாண்டன எனவும் கூறினார். இதன்பின் பேசிய அவர், ஹெலிகாப்டர் விபத்தில் தீக்காயத்துடன் மீட்க்கப்பட்ட வருண் சிங் உடல்நிலை தொடந்து கவலைக்கிடமாக உள்ளது என்றும் பெங்களூரு விமானப்படை மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது எனவும் கூறினார்.