பஞ்சாப்பில் நவ்ஜோத் சிங் சித்துவுக்கும், முதல்வராக இருந்த அமரீந்தர் சிங்குக்கும் மோதல் போக்கு இருந்து வந்தது. இவர்களின் பிரச்சனையை காங்கிரஸ் மேலிடத்தால் கூட சரிசெய்யமுடியவில்லை. ஒருகட்டத்தில் அமரீந்தர் தன்னுடைய தனது முதல்வர் பதவியை ராஜினாமா செய்து விட்டு பஞ்சாப் லோக் காங்கிரஸ் என்ற புதிய கட்சியை தொடங்கினார்.
பின்னர், பாஜகவுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்தித்தார். இந்நிலையில், பாட்டியாலா தொகுதியில் போட்டியிட்ட கேப்டன் அமரீந்தர் சிங் தோல்வி அடைந்தார். பாட்டியாலா தொகுதியில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் அஜீத் பால் சிங் கோலியிடம் அமரீந்தர் படுதோல்வி அடைந்தார்.
பாட்டியாலா சட்டமன்றத் தொகுதியில் 13777 வாக்குகள் வித்தியாசத்தில் அஜித் வெற்றி பெற்றுள்ளார். அஜித் 39,852 வாக்குகளும், அமரீந்தர் 25,169 வாக்குகளும் பெற்றனர். அஜித்துக்கு 45.21 வாக்குகளும், அமரீந்தர் 28.52 சதவீத வாக்குகளும் பெற்றனர். இத்தொகுதியில் மொத்தம் 88,255 வாக்குகள் பதிவாகின. கடந்த 2017 ஆம் ஆண்டு பாட்டியாலா தொகுதியில் அமரீந்தர் 52,407 வாக்குகள் வித்தியாசத்தில் ஆம் ஆத்மி கட்சியின் வேட்பாளர் பல்பீர் சிங்கை தோற்கடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்கா : நடந்து முடிந்த அதிபர் தேர்தலில், டொனால்ட் டிரம்ப் 277 மாகாணங்களில் வெற்றி பெற்று 2-வது முறையாக அமெரிக்காவின்…
டெல்லி : ஜம்மு காஷ்மீரில் சட்டமன்ற தேர்தல் நிறைவடைந்து சட்டமன்ற கூட்டத் தொடரானது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் நேற்று…
சென்னை : நாம் தமிழர் கட்சித் தலைவர் சீமான் இன்று (நவம்பர் 8) தனது 58வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார்.…
சென்னை : சிவகார்த்திகேயன் ரஜினிகாந்த் மீது வைத்து இருக்கும் அன்பைப் பற்றிச் சொல்லியே தெரியவேண்டாம். சினிமாவிற்குள் வருவதற்கு முன்பு வரை…
சென்னை : மது ஒழிப்பு மாநாட்டின் போது, விசிக - அதிமுக கூட்டணி பேச்சுக்கள் , ஆட்சியில் பங்கு அதிகாரத்தில்…
சென்னை : தங்கம் விலை நேற்று நகை பிரியர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கும் விதமாக சற்று குறைந்தது. அதாவது, தீபாவளி பண்டிகையை…