சிம்லாவை விட அதிக குளிர்… மோசமடையும் காற்றின் தரம்.! தத்தளிக்கும் தலைநகர் டெல்லி.!
டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வரும் செய்திகள் தான் வெளியாகி கொண்டு இருந்தன. அதனை தவிர்த்து தற்போது தலைநகர் டெல்லியின் பருவநிலையும் மாறி வருகிறது. தற்போது குளிர்காலம் என்பதால் தலைநகர் டெல்லியில் அதிக அளவிலானா குளிர் பதிவாகியுள்ளது. அதாவது இமாச்சல் பிரதேசம் சிம்லாவை விட அதிகமாக குளிர் பதிவாகியுளளது.
மோசமடையும் காற்றின் தரம்… இந்தியாவின் டாப் 10 லிஸ்ட் இதோ…
டெல்லியில் இன்று காலை பதிவான குளிரின் அளவு 4.9 டிகிரி செல்சீயஸ் ஆகும். அதுவே சிம்லாவில் 6.8 டிகிரி செல்சீயஸ் தன குறைந்தபட்ச வெப்பநிலையாக பதிவாகியுள்ளது. டெல்லியில் அதிகபட்ச வெப்பநிலை 24.1 டிகிரி செல்சீயஸ் ஆகும். சிம்லாவின் அதிகபட்ச வெப்பநிலை 14 டிகிரி செல்சீயஸ் ஆகும்.
நேற்று, டெல்லியில் குறைந்தபட்ச வெப்பநிலையானது 6.2 டிகிரி என பதிவாகியுள்ளது. இது இந்த ஆண்டின் குளிர்காலத்தில் டெல்லியில் மிகக் குறைந்த வெப்பநிலை இதுவாகும். டெல்லியில் கடந்த சில நாட்களாக இயல்பை விட குறைவான வெப்பநிலையே பதிவாகி வருகிறது. கடந்த புதன்கிழமை குறைந்தபட்ச வெப்பநிலை 7.4 டிகிரி செல்சியஸாகவும், செவ்வாய்க்கிழமை 6.8 டிகிரி செல்சியஸாகவும், திங்கள்கிழமை 6.5 டிகிரி செல்சியஸாகவும் தலைநகரில் பதிவாகியுள்ளது.
தில்லி முழுவதும் உள்ள காற்றின் தர கண்காணிப்பு நிலையங்களில், இன்று காலை காற்றின் தரம் மோசமான எனும் பிரிவில் பதிவு செய்யப்பட்டது. காற்றின் தரக் குறியீடு (AQI) 250 எனும் அளவீட்டுக்கு மேல் உள்ளது. டெல்லில் ஆனந்த் விஹாரில், AQI 475 ஆக பதிவாகி இருந்தது, காற்றின் தரம் நேற்று மிகவும் மோசமான நிலை என்ற அளவீட்டில் இருந்து மோசமான நிலை என்ற நிலைக்கு வந்துள்ளது. அதீத குளிரின் காரணமாக வாகன பயன்பாடு குறைந்து இருந்ததன் காரணமாக இந்த அளவீடு பதிவாகி இருக்கலாம் என கூறப்படுகிறது.