மசோதாவால் கொழுந்துவிட்டு எரியும் மாநிலங்கள்-திருத்தம் செய்ய தயார்..உள்துறை உறுதி..!
- குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அஸ்ஸாம், வடகிழக்கு மாநிலம்,மேற்குவங்கத்தியில் போராட்டம் தீவிர அடைந்துள்ளது.
- போராட்டம் காரணமாக இணையம்,இரயில்,விமான சேவை பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மசோதாவில் திருத்தம் செய்ய தயார் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
இரு அவைகளிலும் குடியுரிமை சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.இதற்கு கடுமையான எதிர்ப்புகளை எதிர்கட்சிகள் தெரிவித்து வந்த நிலையில் இந்த மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு மாநிலம்-அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்கத்தில் போராட்டங்கள் வெடித்தது.இதனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களில் ஊடங்கு உத்தரவு,இணைய சேவை துண்டிப்பு என்று நடவடிக்கைகளை அரசு எடுத்து வந்த நிலையில் போராட்டம் சற்று குறைந்த நிலையில் அங்கு விதிமுறைகளும் தளர்த்தபட்டன.மேலும் மேற்கு வங்கத்திலும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.
இந்நிலையில் பதற்றம் நீடித்து வரும் நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தேவைப்பட்டால் மசோதாவில் திருத்தம் செய்ய தயார்.மேலும் இந்த மசோதாவால் வடகிழக்கு மக்களுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது வடகிழக்கு மாநில அரசியல் தலைவர்களுடன் கலந்து ஆலோசித்து தேவைப்பட்டால் குடியுரிமை சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்று உறுதி தெரிவித்தார்.