3-வது அலையையும் தடுக்க முடியாது- மத்திய அரசு..!
இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலையை தடுக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
இந்தியாவில் கடந்த வருடம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் ஒரு வருடத்திற்கு மேலாக தற்போதுவரை தனது கோர முகத்தை காட்டி வருகிறது. கொரோனாவின் முதல் அலையை விட இரண்டாவது அலையின் காரணமாக இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே வருகிறது.
இந்தியாவில் கடந்த சில நாள்களாக நாள்தோறும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை மூன்று லட்சத்தை தாண்டி வருகிறது. இதனால், கொரோனாவை பரவலை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இது ஒரு புறம் இருக்க மறுபுறம் நாடு முழுவதும் உள்ள மருத்துவமனைகளில் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதைத்தொடர்ந்து, பல மருத்துவமனைகளில் ஏற்படும் ஆக்ஸிஜன் மற்றும் படுக்கைகளின் பற்றாக்குறை காரணமாக பலர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில், இந்தியாவில் கொரோனாவில் மூன்றாவது அலையையும் தடுக்க முடியாது என மத்திய அரசு அறிவியல் ஆலோசகர் விஜயராகவன் தெரிவித்துள்ளார். கொரோனா உருமாறி வருவதால் இந்தியாவில் கொரோனா 3-ஆவது அலையை தடுக்க முடியாது என்று மத்திய அரசு கூறியுள்ளது.
எப்போது உருவாகும் என தெரியாததால் 3-வது அலையை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.