நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது..! பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம்..!
நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்க முடியாது என்று பிரதமர் மோடிக்கு கெஜ்ரிவால் கடிதம் எழுதியுள்ளார்.
டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க இருப்பதாக பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாளை நடைபெற உள்ள நிதி ஆயோக் கூட்டத்தில், 2047-க்குள் இந்தியாவை வளர்ந்த நாடாக மாற்றும் நோக்கத்துடன், சுகாதாரம், திறன் மேம்பாடு, பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் உள்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல விஷயங்கள் குறித்து விவாதிக்கப்படும்.
இந்நிலையில், நாளை நடக்கவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ள முடியாது என்று அரவிந்த் கெஜ்ரிவால், பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். அதில், உச்சநீதிமன்றம் நீதியின் மிகப்பெரிய கோயிலாக கருதப்படுகிறது. (அவசர சட்டம் விவகாரத்தில்) உச்சநீதிமன்ற முடிவை கூட பிரதமர் ஏற்கவில்லை என்றால், மற்றவர்கள் நீதிக்கு எங்கே போவார்கள் என்று மக்கள் கேட்கிறார்கள்.
மேலும், அரசியல் சாசனமும் ஜனநாயகமும் இப்படி வெளிப்படையாகப் புறக்கணிக்கப்படும்போதும், கூட்டுறவுக் கூட்டாட்சி (cooperative federalism) முறை கேலி செய்யப்படும்போதும், நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்வதில் அர்த்தமில்லை. அதனால் நாளைய நிதி ஆயோக் கூட்டத்தில் நான் கலந்து கொள்ள முடியாது என்று தெரிவித்துள்ளார்.
Delhi CM Arvind Kejriwal to boycott NITI Ayog meeting, writes a letter to PM Narendra Modi saying “People are asking, if the PM doesn’t abide by the SC then where will people go for justice? What’s the point of attending NITI Ayog meeting when cooperative federalism is a joke” pic.twitter.com/CPIQJaF9oH
— ANI (@ANI) May 26, 2023