ஓடும் ரயிலில் 3 வயது குழந்தைக்கு ஓடி சென்று பால் வாங்கி கொடுத்த பாதுகாப்பு படைகாவலருக்கு குழந்தையின் தாயார் நன்றி.
கொரோனா வைரஸ் காரணமாக ஜூன் 30 வரை ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் ஒரு சில தளர்வுகளை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த பொது முடக்கத்தால் பலர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் வாழ்வு பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. வேலையில்லாமல் கைகளில் காசு இல்லாமல் பட்டினியில் வாடும் இவர்களுக்காக இயக்கப்பட்ட பில்காம்-கோரக்பூர் சிறப்பு ரயிலில் பெற்றோருடன் பயணம் செய்த 3 மாத குழந்தைக்கு பாதுகாப்பு படைவீரரான இந்தர் சிங் என்பவர் பால் வாங்கி கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, பாலுக்காக அழுத குழந்தையின் பசியை போக்க போபால் ரயில் நிலையத்தில் பாதுகாப்பு படை காவலராக பணியாற்றும் இந்தர் சிங் யாதவிடம் உதவியை கேட்டுள்ளனர். அவரும் உடனே விரைந்து சென்று அந்த 3 மாத குழந்தைக்கு கடையில் பால் வாங்கி வந்துள்ளார். ஆனால், அதற்கு முன்பு ரயில் புறப்பட ஆரம்பித்தம் உடனே, இந்தர் சிங் ஓட தொடங்கிய ரயிலுடன் ஓடி சன்னல் வழியாக குழந்தையின் அம்மாவிடம் பாலை கொடுத்துள்ளார்.
இந்தர் சிங் மனிதநேயத்துடன் செய்த இந்த காரியம் ரயில்வே நிலையத்தில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. கேமராவில் பதிவான வீடியோ இணையத்தில் வெளியாகி வைரலாகி வந்தது. இதனையடுத்து ரயில்வே அமைச்சரான பியூஷ் கோயல் இந்தர் சிங்கின் இந்த செயலை பாராட்டியது மட்டுமில்லாமல் ரொக்க பரிசு வழங்கவுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த இக்கட்டான சூழ்நிலையில் தனக்கு உதவிய இந்தர் சிங்க்கு நன்றியை தெரிவித்துள்ளார். இதில் அவர் கூறியது என்னவென்றால் குழந்தையின் பசியை அமைத்த மின்னல் வேகத்தில் அவர் ஓடிவந்தது என்னால் வாழ்நாளில் மறக்கமுடியாது. மனிதாபிமானம் இன்னும் உயிருடன் தான் இருக்கிறது என்பதற்கு இன்னொரு உதாரணம் என்று நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.
சென்னை : பெண்கள் பணிபுரியும் அலுவலகங்களில் 'விசாகா கமிட்டி’ அமைக்காதது ஏன்? என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி கேள்வி…
சென்னை : வடகர்நாடக கோவா கடலோர பகுதிகளுக்கு அப்பால் உள்ள மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் இன்று காலை (21-05-2025) 0830…
கோவை : கடந்த மே 17-ம் தேதி கோவை மாவட்டம் மருதமலை அடிவாரத்தில் ஒரு தாய் யானையும் அதன் குட்டியும்…
மதுரை : மாநிலம் முழுவதும் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாகவுள்ள இடங்களுக்கு இடைத்தேர்தல் நடத்த இடைக்காலத் தடை விதித்து, மதுரை ஐகோர்ட்…
சென்னை: கடந்த 2024 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், ரவி மோகன் தனது மனைவி ஆர்த்தியிடமிருந்து விவாகரத்து கோரி சென்னை…
மும்பை : ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் மும்பை வான்கடே மைதானத்தில் இன்று இரவு 7.30 மணிக்கு நடைபெற உள்ள ஆட்டத்தில்…