அமெரிக்காவின் ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர் போட்டி ..!
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாண ஆளுநர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வேட்பாளர் போட்டியிடுகிறார்.
மேலாளராகப் பணியாற்றும் 22 வயதான சுபம் கோயலின் பெற்றோர் உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். சமூக வலைதளங்களில் அரசியல், நிர்வாக வெளிப்படைத் தன்மை குறித்து ஏற்கெனவே பிரச்சாரம் செய்து வந்த அவர், கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் பொருளியலும், திரைப்படத்துறை சார்ந்த கல்வியும் பயின்றுள்ளார்.
பிரச்சனைகளுக்கு நடைமுறைத் தீர்வு காணும் திறமையுள்ளவர்களே தேவை என்றும் பிரச்சாரத்தில் சுபம் வலியுறுத்தி வருகிறார். மேலும் தாம் ஆளுநரானால், நிர்வாக செலவுகள், நன்கொடை உள்ளிட்டவை வெளிப்படையாக மக்களுக்குத் தெரிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.