இஸ்லாமியர்கள் இட ஒதுக்கீடு ரத்து – இடைக்கால தடை விதித்து கர்நாடக அரசுக்கு உத்தரவு!
கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4% இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9 வரை அமல்படுத்த உச்சநீதிமன்றம் தடை.
கர்நாடகாவில் இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீட்டை ரத்து செய்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, இஸ்லாமியர்களுக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்த உத்தரவை மே 9ம் தேதி வரை அமல்படுத்த கூடாது என்று கர்நாடகா அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கர்நாடகாவில் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீடு கர்நாடகாவில் 30 ஆண்டுகளாக அமலில் உள்ளது. இஸ்லாமியர்களுக்கான 4% இட ஒதுக்கீடு விவகாரம் கர்நாடக அரசியல் காலத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, கர்நாடகாவில் மே மாதம் 10-ம் தேதி சட்டசபைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில், இஸ்லாமிய மக்களுக்கான தனி இட ஒதுக்கீட்டை ரத்து செய்வதாக பாஜக அரசு அறிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது. இந்த நிலையில், கர்நாடகாவில் இஸ்லாமியர்களின் 4% இட ஒதுக்கீடு ரத்து என்ற முடிவை மே 9 வரை அமல்படுத்த உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.