டிசம்பர் 10 ஆம் தேதி வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தை குறிப்பாக நாகப்பட்டினம் , தஞ்சாவூர் , திருவாரூரை காலி செய்த கஜா புயலின் தாக்கத்திலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மக்கள் மீண்டு வருகின்றனர்.
புயலின் பாதிப்பில் சரியாக மீட்புப்பணி , நிவாரணம் வராத நிலையில் மக்கள் இன்று போராட்டம் நடத்தினர்.அதுமட்டுமில்லாமல் நாகை , திருவாரூர் மற்றும் தஞ்சை ஆகிய மாவட்டங்களில் நிவாரண பணிகளையும் , நிவாரண உதவிகளையும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் செய்து வருகின்றனர்.
கஜா புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு, அரசு பேருந்துகளில் எடுத்து செல்லப்படும் நிவாரண பொருட்களுக்கு லக்கேஜ் கட்டணம் ரத்து செய்யப்பட்டது.
கடந்த நவம்பர் 23 ஆம் தேதி கஜா நிவாரணப் பொருட்களுக்கு ரயிலில் சரக்குக் கட்டணத்திலிருந்து விலக்கு அளிக்க ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயலுக்கு முதலமைச்சர் பழனிசாமி கடிதம் அனுப்பினார்.
இந்நிலையில் முதலமைச்சர் பழனிசாமியின் கோரிக்கையை ஏற்று டிசம்பர் 10 ஆம் தேதி வரை ரயில்களில் கொண்டு செல்லும் நிவாரண பொருட்களுக்கு சரக்கு கட்டணம் ரத்து செய்து ரயில்வே அமைச்சகம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
சென்னை : கங்குவா படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வரும் நிலையில், படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும்…
கேரளா : ஒவ்வொரு ஆண்டு கார்த்திகை மாதம் தொடங்கிவிட்டது என்றாலே நாடுமுழுவதும் உள்ள மக்களில் பலர் கேரளாவில் உள்ள சபரிமலை…
சென்னை : தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் அரசியல் வருகை குறித்தும் மாநாட்டில் அவர் பேசிய விஷயங்கள் குறித்தும்…
திருவண்ணாமலை -தமிழ் மாதங்களில் எட்டாவது மாதமாக வரக்கூடியது தான் கார்த்திகை மாதம் .இந்த கார்த்திகை மாதத்தில் அனைவரும் வீடுகளில் விளக்கேற்றி…
டெல்லி : ஐபிஎல் போட்டிகளில் இந்தியாவின் அதிரடி ஆட்டக்காரர் யுவராஜ் சிங் வீரராக விளையாடவில்லை என்றாலும் அணிக்குப் பயிற்சியாளராக வருவாரா?…
ஜார்க்கண்ட் : காங்கிரஸ் எம்பியும், மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தியின் ஹெலிகாப்டர் விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டின் (ஏடிசி) அனுமதி…