தேர்தல் பத்திர முறைகள் ரத்து… உச்சநீதிமன்ற தீர்ப்பின் முக்கிய அம்சங்கள்!

electoral bond

அரசியல் கட்சிகள் நிதி பெற வழிவகுக்கும் தேர்தல் பத்திரங்கள் திட்டம் கடந்த 2018ல் கடும் எதிர்ப்பை மீறி மத்திய பாஜக அரசு கொண்டு வந்தது. இந்த தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகள் நன்கொடை பெறலாம். ஆனால், ஒருவரிடம் இருந்து அதிகமாக தொகை பெரும் அரசியல் கட்சிகள், அதன் முழு விவரங்களை தேர்தல் ஆணையத்தில் தெரிவிக்க வேண்டும் என இருந்தது. பின்னர், இந்த சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டதால், நன்கொடைகள் குறித்து தேர்தல் ஆணையத்திடம் தெரிவிக்க தேவை இல்லை என கூறப்பட்டது.

இந்த தேர்தல் பத்திரங்களை ஸ்டேட் வங்கியின் சார்பில் ரூ.1,000, ரூ.10,000, ரூ.1 லட்சம், ரூ.10 லட்சம், ரூ.1 கோடி மதிப்பில் வெளியிடப்பட்டன. இதன் மூலம் தனிநபர்கள், நிறுவனங்கள் தேர்தல் பத்திரங்களை வாங்கி தங்களுக்கு விருப்பமான அரசியல் கட்சிகளுக்கு நன்கொடையாக வழங்கலாம். இந்த சூழலில் தேர்தல் பத்திரங்கள் மூலம் ஒவ்வொரு அரசியல் கட்சியும் பெருமளவு நிதிகளை குவிப்பதாக குற்றச்சாட்டு எழுந்தது.

தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்தது உச்ச நீதிமன்றம்!

இதனால் தேர்தல் பத்திர திட்டத்தில் வெளிப்படைத்தன்மை இல்லை, தேர்தல் பத்திர முறை திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் பொதுநல வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையிலான 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு விசாரித்து வந்த நிலையில், இன்று தீர்ப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

அதன்படி, தேர்தல் பத்திர முறைகளுக்கு எதிரான வழக்கில் உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு, தேர்தல் பத்திர திட்டம் ‘அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது’ என்று ஒருமனதாகத் தீர்ப்பளித்தது. அதாவது, தேர்தல் பத்திர முறைகளை ரத்து செய்து உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பில், தேர்தல் பத்திர முறை அரசியலமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது.

வங்கிகள் தேர்தல் பத்திரங்கள் வழங்குவதை உடனடியாக நிறுத்த வேண்டும். தேர்தல் பத்திரங்கள் முறை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் மற்றும் அரசியல் சாசனப் பிரிவுகளை மீறும் வகையில் உள்ளது. கார்ப்பரேட் நிறுவனங்கள் வரம்பற்ற பங்களிப்புகளை அரசியல் கட்சிகளுக்கு வழங்க அனுமதிப்பது தன்னிச்சையானது, அதனை ஏற்க முடியாது.  நன்கொடை வழங்குவோர் குறித்த விவரங்களை தெரிவிக்க தேவையில்லை என்பது வாக்காளர்களின் உரிமைகளை பறிப்பதாக உள்ளது. அரசை கணக்கு கேட்கும் உரிமை மக்களுக்கு உள்ளது.

“டெல்லி சலோ” போராட்டம்… இன்று மத்திய அரசு பேச்சுவார்த்தை..!

தேர்தல் பத்திரங்கள் மக்களின் அடிப்படை உரிமைகளை மீறுவதாக உள்ளது  எனவே, மார்ச் 6ம் தேதிக்குள் தேர்தல் பத்திரம் மூலம் வழங்கப்பட்டுள்ள அனைத்து பங்களிப்புகளின் விவரங்களையும், தேர்தல் ஆணையத்துக்கு எஸ்.பி.ஐ வழங்க வேண்டும். இதனை மார்ச் 13ம் தேதிக்குள் இணையத்தில் தேர்தல் ஆணையம் பதிவேற்றம் செய்ய வேண்டும்.

மேலும், தேர்தல் பத்திரம் சட்டம் மட்டுமல்ல, தேர்தல் பத்திரங்களை வழங்க கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு அனுமதிக்கும் வகையில் செய்யப்பட்ட கம்பெனி சட்டதிருத்த மசோதா, வருமான வரிச் சட்டம் மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் ஆகியவற்றில் உள்ள விதிகளை ரத்து செய்யப்படுவதாகவும், தேர்தல் பத்திரம் மூலம் பெற்ற நன்கொடைகளை கொடுத்தவர்களுக்கே திருப்பி அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்