கல்வி கடன் ரத்தா.? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் விளக்கம்..!
- இந்தியா பொருளாதாரம் மந்த நிலையில் இருப்பதனால் கல்வி கடன்களை ரத்து செய்ய எந்த திட்டமும் இல்லை.
- உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது.
- 2016-17-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை கல்வி கடன்களின் மொத்த மதிப்பு அதாவது ரூ.67,685.59 கோடியிலிருந்து ரூ.75,450.68 கோடியாக உயர்ந்துள்ளது.
இந்தியா பொருளாதாரத்தில் மந்தநிலை இருப்பதால் கல்வி கடனை ரத்து செய்ய எந்த ஒரு திட்டமும் இல்லை. மொத்த உள்நாட்டு உற்பத்தி கடந்த 6 ஆண்டுகளில் கடும் சரிவை கண்டுள்ளது. இதனால் தான் பொருளாதாரத்தில் மந்தநிலை ஏற்பட்டுள்ளது என கூறப்படுகிறது. கடந்த காலாண்டில் பொருளாதார வளர்ச்சி 4.5% சதவீதமாக இருந்தது.
அதே சமயம் பொருளாதாரம் மந்தநிலையில் இருப்பதால் நாட்டில் வேலையின்மை அதிகரித்துள்ளது, என தகவல் வெளியாகியுள்ளது. சி.எம்.ஐ.இ என்ற இந்தியா பொருளாதாரத்தை கண்காணிக்கும் அமைப்பின் தரவுகளின் படி நாட்டில் தற்போது வேலையின்மை 7.5% சதவீதமாக அதிகரித்துள்ளது.
இந்நிலையில், வேலையின்மை காரணமாக மாணவர்களின் கல்வி கடனை மத்திய அரசு ரத்து செய்யும் என தகவல் வெளியாகியிருந்தது. கல்வி கடன் ரத்து தொடர்பாக மத்திய அரசு எந்தவொரு நடவெடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் மக்களவையில் கேள்வி ஒன்றிற்கு பதில் அளித்துள்ளார். அதில் 2016-17-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு மார்ச் மாதம் வரை நிலுவையிலுள்ள கல்வி கடன்களின் மொத்த மதிப்பு மிகவும் அதிகரித்துள்ளது.
அதாவது இந்தத்தொகை ரூ.67,685.59 கோடியிலிருந்து ரூ.75,450.68 கோடியாக உயர்ந்துள்ளது. கல்வி கடன்கள் மற்றும் அந்த மாணவர்களின் வேலை தொடர்பான தரவுகள் சரியாக இணைக்கப்படவில்லை. அத்துடன் கல்வி கடன்களை வசூலிக்க வங்கிகள் சரியான அணுகுமுறையை கையாளவேண்டும், என்று மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. எனினும் கல்வி கடன்களை ரத்து செய்யும் திட்டம் எதுவும் மத்திய அரசிற்கு இல்லை என தெரிவித்திருந்தார்.