உத்தரகண்ட்டில் +2 பொதுத்தேர்வு ரத்து-அமைச்சர் அறிவிப்பு..!

Default Image

உத்தரகண்ட் மாநிலத்தின் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே +2 தேர்வினை ரத்து செய்துள்ளதாக இன்று அறிவித்துள்ளார்.

கொரோனா இரண்டாம் அலையின் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நேற்று பிரதமர் நரேந்திர மோடி, சிபிஎஸ்இ +2 பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளார்.

இதனை தொடர்ந்து, +2 பொதுத்தேர்வினை குறித்த முடிவுகளை அந்தந்த மாநிலங்கள் முடிவெடுக்கலாம் என்று அறிவித்திருந்த நிலையில், உத்தரகண்ட் மாநிலத்தில் இன்று +2 பொது தேர்வை ரத்து செய்துள்ளனர். இதனை, அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அரவிந்த் பாண்டே தெரிவித்துள்ளார்.

மேலும் இதற்கு முன்னர் குஜராத் மற்றும் மத்திய பிரதேசம் +2 பொதுத்தேர்வினை ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்