8-ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறை ரத்து…!!
பள்ளிகளில் 8ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி அளிக்கும் முறையை ரத்து செய்யும் மசோதா மாநிலங்களவையில் நிறைவேறியது.
மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படாமல் இருக்க, கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் திருத்தம் கொண்டுவரப்பட்டது. மக்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில், நேற்று மாநிலங்களையில் நிறைவேறியுள்ளது. இந்த சட்டத்தால், பள்ளி படிப்பை பாதியில் கைவிடும் மாணவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறுவது ஏற்புடையதல்ல என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் கூறியுள்ளார். போட்டி உணர்வை உருவாக்குவதே நோக்கம் என்றும், எந்தவொரு மாணவரும் இடைநீக்கம் செய்யப்பட மாட்டார்கள் என்றும் தெரிவித்தார்.