பெங்களூருவில் ஓலா கார் சேவை ரத்து- கர்நாடக அரசு உத்தரவு
- அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பைக் டாக்ஸிக்களை ஓட்டியதை கண்டுபிடிக்கப்பட்டது.
- உத்தரவை மீறி ஓலா டாக்ஸிக்கள் பெங்களூருவில் ஓடினால் நடவடிக்கை எடுக்க ஆர்டிஓ-விற்கு உத்தரவு விட்டது
நாம் ஒரு இடத்தில் இருந்து வேறு இடத்திற்கு பயணம் செய்யும் வகையில் தற்போது டாக்சி சேவைகளை உபேர் மற்றும் ஓலா போன்ற பல்வேறு தனியர் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
இந்நிலையில் மொபைல் ஆப் அடிப்படையில் கார் சேவைகளை நடத்த ஓலாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஆனால் அனுமதி பெறாமல் சட்ட விரோதமாக பைக் டாக்ஸிக்களை ஓட்டியதை கண்டுபிடிக்கப்பட்டது.
இது தொடர்பாக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. இது குறித்து ஓலா நிறுவனத்துக்கு அளித்த நோட்டீஸ்களுக்கு அவர்கள் அளித்த பதில் திருப்திகரமாக இல்லை என்பதால் , 260 இருசக்கர வாகனங்கள் கொட்டடியில் அடைக்கப்பட்டன.
மேலும் உத்தரவை மீறி ஓலா டாக்ஸிக்கள் பெங்களூருவில் ஓடினால் நடவடிக்கை எடுக்க ஆர்டிஓ-விற்கு உத்தரவு விட்டது.