அரசு எழுத்துபூர்வமாக தங்களது முடிவுகளை அளித்தபின், விவசாய தலைவர்கள் அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவு செய்வார்கள்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் டெல்லியில் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தில் பஞ்சாப் மற்றும் ஹரியானா விவசாயிகள் அதிக அளவில் கலந்து கொண்டனர். இந்நிலையில், நேற்று இரவு 7 மணிக்கு அமித்ஷாவுடன் 13 விவசாய சங்க தலைவர்கள் பேச்சுவார்த்தை ஈடுபட்டனர். இந்த பேச்சுவார்த்தை நீண்ட நேரம் நீடித்தது.
இந்த பேச்சுவார்த்தைக்கு பின் அகில இந்திய கிசான் சபை பொது செயலாளர் ஹன்னன் மொல்லா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், இறுதி முடிவு எதுவும் எட்டப்படவில்லை என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து டிசம்பர் 9ஆம் தேதி இந்திய அரசு மற்றும் விவசாய சங்க பிரதிநிதிகள் இடையே நடப்பதாக இருந்த பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டுள்ளது என்றும், புதிய சட்டங்கள் திருத்தம் செய்யப்படும் என்று எழுத்துபூர்வமாக உத்தரவாதம் அளிக்க தயார் என்று அமித்ஷா தங்களிடம் கூறியதாகவும், ஆனால் எங்களுக்கு இந்த சட்டம் திரும்பப் பெற வேண்டும் என்பதே கோரிக்கை என்றும் அவர் கூறியதாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், இந்திய அரசு எழுத்துபூர்வமாக தனது முன்மொழிவு அளித்த பின்பு, வேளாண் அமைப்பு தலைவர்கள் தங்களது அடுத்த கட்ட திட்டம் குறித்து முடிவு செய்வார்கள் என்று அவர் தெரிவித்துள்ளார்.
சென்னை : தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக இருக்கும் நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசன் அவ்வப்போது சில அரசியல் கருத்துக்களை பேசியும்…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டெல்லி கேபிட்டல்ஸ்…
தூத்துக்குடி : கடந்த 1999ஆம் ஆண்டு செப்டம்பர் 17, 18 தேதிகளில் ஒரு வழக்கு விசாரணைக்காக வின்சென்ட் என்பவர் கைது…
சென்னை : மத்தியில் நாடாளுமன்றத்திற்கும் மாநில சட்டமன்றங்களுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தும் பொருட்டு மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு…
சென்னை : இன்றைய ஐபிஎல் போட்டியில் ருதுராஜ் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், அக்சர் படேல் தலைமையில் டெல்லி…
சென்னை : இன்றைய ஐபிஎல் ஆட்டத்தில் ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் , அக்சர் படேல்…