டெல்லி உயர்நீதிமன்றம் மறுப்பு!இண்டிகோ விமானங்கள் மொத்தமாக தடை செய்ய மறுப்பு…
டெல்லி உயர்நீதிமன்றம், பழுதான எஞ்சின்கள் பொருத்தப்பட்டு பயணிகளின் உயிர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய இண்டிகோ விமானங்கள் மொத்தமாக தடை செய்யப்பட வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்க மறுத்துவிட்டது.
பிராட் வகை எஞ்ஜின் பொருத்தப்பட்டுள்ள இண்டிகோ விமானங்கள் நடுவானில் பயணிகளுக்கு திகிலை ஏற்படுத்தி அவசரமாக தரையிறக்கப்படும் சம்பவங்கள் தொடர்கதையாகி வரும் நிலையில், அந்த விமானங்களின் 65க்கும் மேற்பட்ட தினசரி சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன.
ஆனால் ஒட்டுமொத்தமாக இண்டிகோ விமானங்களுக்கு தடை விதிக்கக் கோரி டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் கீதா மிட்டல் மற்றும் ஹரிசங்கர் ஆகியோர் ஒட்டு மொத்தமாக இண்டிகோவை தடை செய்ய முடியாது என்று தெரிவித்தனர். இவ்வழக்கின் விசாரணை இம்மாதம் 20ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும் செய்திகளுக்கு தினச்சுவடுடன் இணைந்திருங்கள்.