கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசு கொண்டுவந்த வேளாண் சட்டங்களை எதிர்த்து, கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் இந்த போராட்டத்திற்கு பிரபலங்கள் பலர் தங்களது கண்டனக் குரலை எழுப்பி வருகிறனர்.
மத்திய அரசு விவசாயிகளுடன் பலகட்ட பேச்சுவார்த்தை நடத்தியும் இதற்கு எந்த தீர்வும் இதுவரை எட்டப்படவில்லை. சர்வதேச கவனத்தை ஈர்த்துள்ள இந்த விவசாயிகள் போராட்டம் தொடர்பாக பல தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இதுகுறித்து கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள் கூறுகையில், ‘ஜனநாயகத்தை வலுப்படுத்தும் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண முடிவெடுத்து செயல்படும் இந்திய அரசுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் இந்தியாவின் மிகப்பெரிய மருத்துவ திறனும், பிரதமர் மோடியின் தலைமையும் தொற்றுநோய்க்கு உலகிற்கு முக்கியமாக இருக்கும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.’ வேளாண் சட்டங்கள் தொடர்பாக மத்திய அரசு விவசாயிகளுடன் 11 கட்ட பேச்சுவார்த்தைகள் இதுவரை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெட்டா : ஐபிஎல் 2025 தொடருக்கான மெகா ஏலத்தின் முதல் நாள் தற்போது நிறைவடைந்துள்ளது. பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கிய…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான முதல் நாள் மெகா ஏலம் சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று…
ஜெட்டா : ஐபிஎல் 2025-ஆண்டு நடைபெறவுள்ள கிரிக்கெட் தொடருக்கான மெகா ஏலம் பெரிய எதிர்பார்ப்புகளுக்கு இடையே இன்று சவூதி அரேபியாவில்…
ஜெட்டா : ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அதில் அனைவரின் கண்ணும் முக்கிய வீரர்களின்…
ஜெட்டா : அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் ஐபிஎல் போட்டிகளுக்கான மெகா ஏலமானது இன்று சவூதி அரேபியாவில் உள்ள ஜெட்டாவில்…
ஜெட்டா : 18-வது ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்போது சவூதி அரேபியாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதில், முக்கிய…