ஊரடங்கை மீறிய தம்பதிகள் மீது டெல்லியில் வழக்கு பதிவு செய்யப்பட்டதை அடுத்து காவல்துறையினரிடம் நான் என் கணவரை முத்தமிடுவதை உங்களால் தடுக்க முடியுமா என அத்துமீறி பேசிய பெண்ணின் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
கொரோனா வைரஸின் இரண்டாம் அலை இந்தியாவில் தற்பொழுது உருவாகி நாளுக்கு நாள் புதிய உச்சத்தை எட்டி வருகிறது. குறிப்பாக தலைநகர் டெல்லியில் தினமும் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் புதிதாக பாதிக்கப்படுவதுடன், நூற்றுக்கு மேற்பட்டோர் உயிரிழந்து வருகின்றனர். இந்நிலையில் கடுமையான கட்டுப்பாடுகளை மாநில அரசு அறிவித்துள்ளது. மேலும், வார இறுதியில் ஊரடங்கை அமல் படுத்தியும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்படி நேற்று முன்தினம் முதல் டெல்லியில் வார இறுதி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அது போல இரவு நேரத்தில் 10 மணிக்கு பின்பு மக்கள் யாரும் வெளியில் வராமல் வீட்டுக்குள் முடங்கி நிலையிலும் உள்ளனர். இந்நிலையில் வார இறுதி ஊரடங்கை மீறி முறையான காரணங்கள் இன்றி வெளியே செல்லக் கூடிய மக்கள் கைது செய்யப்படுவீர்கள் எனவும், வழக்கு பதிவு செய்யப்படும் எனவும் போலீசார் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஆனால் அதையும் மீறி டெல்லியில் உள்ள தம்பதிகள் இருவர் காரில் முகக் கவசம் அணியாமல் வார இறுதி நாளான நேற்று ஊரடங்கு வெளியில் சென்றுள்ளனர். எனவே அவர்களை தடுத்த போலீசார் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த அந்த பெண்மணி தாங்கள் ஊரடங்கு மதிக்காததை கருத்தில் கொள்ளாமல், நான் என் கணவருடன் தானே காருக்குள் இருக்கிறேன், நான் ஏன் முகக்கவசம் அணிய வேண்டும்? அப்படியானால் நான் என் கணவருக்கு முத்தம் கொடுப்பதை உங்களால் தடுக்க முடியுமா? என காவல்துறையினரிடம் அத்துமீறி கோபமாக பேசி உள்ளார். இவர் இவ்வாறு நடந்துகொண்டது வீடியோ வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது. இதோ அந்த வீடியோ,
சென்னை : இன்று (நவம்பர் 22) சென்னை அண்ணா அறிவாலயத்தில் தமிழக முதலமைச்சரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக…
டெல்லி : உலகளவில் பெரும்பாலான ஸ்மார்ட் போன் பயன்பாட்டாளர்களின் இணையவழி தேடல் எஞ்சினாக செயல்பட்டு வருகிறது கூகுள் குரோம். இந்த…
சேலம் : பள்ளி மாணவர்களை பள்ளிகளில் வேலை வாங்கும் நிகழ்வுக்கு அவ்வபோது உயர் கல்வி அதிகாரிகள் நடவடிக்கைகள் எடுத்து வந்தாலும்,…
சென்னை : கடந்த அக்டோபர் 27ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி.சாலை பகுதியில் தமிழக வெற்றிக் கழகம்…
சென்னை : தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் இன்று ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.…
ஆஸ்திரேலியா : அதானி குழுமத்திற்கு இந்த வாரம் அடிமேல் அடியாக விழுந்து கொண்டிருக்கிறது. ஏற்கனவே அமெரிக்க வழக்கறிஞர்கள் அளித்த லஞ்ச…