கொரோனாவை 30 வினாடிகளில் கண்டறியும் சோதனையில் இந்தியா-இஸ்ரேல் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
‘ஆர்டிபிசிஆர்’ பரிசோதனை முறை கொரோனாவை கண்டுபிடிக்க இந்தியாவில் பின்பற்றப்படுகிறது. இதன் முடிவு வர சில மணி நேரம் ஆகும்.எனவே இந்தியாவும், இஸ்ரேலும் இணைந்து 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு கருவி ஒன்றை கூட்டாக உருவாக்க உள்ளது.இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக் குழு மற்றும் இந்தியாவின் டி.ஆர்.டி.ஓ.வுடன் இணைந்து இதற்கான ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளது.
குறிப்பாக இந்திய பாதுகாப்பு ஆராய்ச்சிஅமைப்பு மற்றும் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகரான பேராசிரியர் கே விஜயராகவன் குழுவுடன் இணைந்து 30 வினாடிகளில் கொரோனாவை கண்டறியும் அதிவிரைவு பரிசோதனைக்கருவியை உருவாக்கும் பணிகளை மேற்கொள்கிறார்கள்.
இந்நிலையில் இந்தியாவுக்கான இஸ்ரேலிய தூதர் ரான் மல்கா டாக்டர் ராம் மனோகர் லோஹியா (ஆர்.எம்.எல்) மருத்துவமனையில் உருவாக்கப்பட்ட சிறப்பு சோதனை தளத்தை பார்வையிட்டார். மல்காவுடன் பிரதமரின் முதன்மை அறிவியல் ஆலோசகரான பேராசிரியர் கே விஜயராகவன் உடன் இருந்தார்.அப்போது பேசிய மல்கா, “இந்த சோதனைகளில் ஒன்று கூட அரை நிமிடத்திற்குள் வைரஸைக் கண்டறிவதில் வெற்றிகரமாக இருந்தால், இது உலகம் காத்திருக்கும் கொரோனா அடையாளத்தின் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும்.”மேம்பட்ட இஸ்ரேலிய மற்றும் இந்திய தொழில்நுட்பம் மற்றும் இந்தியாவின் உற்பத்தி வலிமையை இணைப்பதன் மூலம், ஒரு தடுப்பூசி உருவாகும் வரை நம் வாழ்க்கையை மீண்டும் தொடங்குவதற்கும் வைரஸுடன் இருப்பதற்கும் ஒரு வழியைக் காணலாம்” என்று அவர் கூறினார்.
பேராசிரியர் விஜய் ராகவன் கூறுகையில், இந்த ஆழமான ஒத்துழைப்பில் அதிநவீன அடிப்படை அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை சமூகத்திற்கு மொழிபெயர்ப்பது காணப்படுகிறது.இத்தகைய வலுவான சோதனைகள் அறிவியலின் தொடுகல்லாகும், “என்றார்.விஞ்ஞானத்தின் ஒவ்வொரு துறையிலும் இஸ்ரேலும் இந்தியாவும் ஒத்துழைப்பைப் பகிர்ந்துகொள்கின்றன என்று கூறினார் விஜயராகவன். பல ஆண்டுகளாக வளர்ந்து வரும் இரு நாடுகளுக்கும் இடையிலான நட்பும் நம்பிக்கையும், நடந்துகொண்டிருக்கும் ஆய்வுகள் வேகத்தோடும் தரத்தோடும் நிகழ்த்தியுள்ளன என்றார்.”இவற்றில் சில வெற்றிகரமாக அமையும், இதன் விளைவாக நம் நாடுகளுக்கும் மனிதகுலத்திற்கும் பெரும் மதிப்பு கிடைக்கும் என்று நான் நம்புகிறேன்” என்று விஜயராகவன் தெரிவித்துள்ளார்.
இதனிடையே இஸ்ரேல் நாட்டின் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த, 20 நிபுணர்கள், இந்தியா வந்தடைந்தனர்.அவர்களுடன், அதிநவீன மருத்துவ உபகரணங்களை, இஸ்ரேல் அரசு, இந்தியாவிற்கு அனுப்பி வைத்தது குறிப்பிடத்தக்கது.
சென்னை : நடிகர் டெல்லி கணேஷின் மறைவு திரைத்துறையில் பெரும் அதிர்ச்சி கலந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில்,சமூக வலைதளைத்தில் திரைத்துறை…
விருதுநகர் : குமாரசாமி ராஜா அலுவலகத்தில் ரூ.77.12 கோடி மதிப்பில் கட்டப்பட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து…
உத்தரப்பிரதேசம் : மாநிலத்தில் ஒரு வருடம் பழமையான கொலை வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்திருக்கிறது. இது மீதும் விசாரணைக்கு வந்ததற்கு…
சென்னை : தமிழகத்தில் இந்த ஆண்டு வடகிழக்கு பருவமழை இயல்பை விட அதிகமாக இருக்கும் எனப் பருவமழை தொடங்கிய சமயத்திலேயே…
சென்னை : வயது முதிர்வு காரணமாக பிரபல மூத்த நடிகர் டெல்லி கணேஷ் (80) நேற்று இரவு காலமானார். சென்னையில்…
ரஷ்யா : ரஷ்யாவில் குறைந்து வரும் மக்கள் தொகையை சமாளிக்க புதிய அமைச்சகம் அமைக்க திட்டமிட்டு வருகிறார்கள். அதாவது,மூன்று ஆண்டுகளாக…