அப்படியா…1 ரூபாய்க்கு தங்க நாணயம் வாங்கலாமா? – எப்படி என்பது இங்கே…

Default Image

டிஜிட்டல் தங்கத்தை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம்.அது எப்படி என்று கீழே காண்போம்.

தீபாவளிக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு தண்டேராஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது மற்றும் புதிய கொள்முதல் செய்ய ஒரு நல்ல நாளாக கருதப்படுகிறது.இந்நாளில் மஞ்சள் உலோகம்(தங்கம்) அல்லது வெள்ளியில் முதலீடு செய்வது செழிப்பைக் கொண்டுவரும் என்று மக்கள் நம்புகிறார்கள். இந்த ஆண்டு தண்டேராஸ் பண்டிகை நவம்பர் 2 செவ்வாய்க்கிழமை கொண்டாடப்படுகிறது.

தண்டேராஸ் பண்டிகையின் போது தங்கம் அல்லது வெள்ளி வாங்குவது இந்திய பாரம்பரியமாக இருந்து வருகிறது.இருப்பினும், தற்போதைய தொற்றுநோய்களுக்கு மத்தியில் தங்கத்தை வாங்குவது வாடிக்கையாளர்களுக்கு சற்று சிரமமாக உள்ளது.ஆனால் நீங்கள் அதிக பணம் செலவழிக்க விரும்பவில்லை என்றால், டிஜிட்டல் தங்கம் ஒரு சிறந்த தேர்வாக இருக்கும்,ஏனெனில் டிஜிட்டல் தங்கம் சமீப காலமாக ஒரு முக்கிய முதலீட்டு சாதனமாக உயர்ந்துள்ளது.

நீங்கள் அதை வெறும் 1 ரூபாய்க்கு வாங்கலாம். பேடிஎம்,கூகுள் பே,போன்பே ஆகியவை மூலமாக (PayTM, Google Pay, Phone Pe) 99.99% தூய சான்றளிக்கப்பட்ட தங்க நாணயத்தை 1 ரூபாய்க்கு வாங்கலாம்.மேலும் ,ஹெச்டிஎஃப்சி (HDFC) வங்கி செக்யூரிட்டிஸ் அல்லது மோதிலால் ஓஸ்வால் வாடிக்கையாளர்களும் டிஜிட்டல் தங்கத்தை வாங்கலாம்.

தங்க நாணயம் வாங்குவது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்:

  • கூகுள் பே கணக்கைத் திறக்கவும்.
  • கீழே உள்ள தங்க விருப்பத்தைத்(Gold option) தேர்ந்தெடுக்கவும்.
  • சிறிய கட்டணத்தைச் செலுத்தி உங்கள் டிஜிட்டல் தங்கத்தை வாங்குங்கள்.
  • நீங்கள் வாங்குவதற்கு 3% ஜிஎஸ்டியும் விதிக்கப்படும்.
  • உங்கள் தங்க நாணயம் மொபைல் வாலட்டின் தங்க லாக்கரில் பாதுகாக்கப்படும்.
  • நீங்கள் தங்கத்தை விற்கலாம், வழங்கலாம் அல்லது பரிசளிக்கலாம்.
  • நீங்கள் தங்கத்தை விற்க விரும்பினால், விற்பனை பட்டனை(sell button) கிளிக் செய்யவும்.
  • நீங்கள் அதை பரிசளிக்க விரும்பினால், பரிசு பட்டனை (gift button) கிளிக் செய்யவும்.

தங்க நாணயத்தை உங்கள் வீட்டு வாசலில் டெலிவரி செய்வது எப்படி:-

ஹோம் டெலிவரிக்கு, வாடிக்கையாளர்கள் குறைந்தபட்சம் அரை கிராம் டிஜிட்டல் தங்கத்தை நாணயங்கள் அல்லது பார்கள் வடிவில் வாங்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்