“ஐயப்பன் கோயிலில் பெண்கள் நுழையலாமா” இன்று தீர்ப்பு வழங்குகிறது உச்ச நீதிமன்றம்..!!

Published by
Dinasuvadu desk

புதுடெல்லி: சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கில், உச்ச நீதிமன்றத்தின் நாளை தீர்ப்பு அளிக்க உள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என இந்திய இளம் வக்கீல்கள் சங்கம் சார்பில் ஒரு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மற்றும் நீதிபதிகள் நாரிமன், சந்திராசூட், கன்வில்கர், இந்து மல்கோத்ரா ஆகியோர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு முன் நடந்து வந்தது.
Image result for உச்ச நீதிமன்றம்மேலும் இந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் சார்பில் ரஜு ராமசந்திரன், ராமமூர்த்தி ஆகிய இருவர் சிறப்பு வழக்கறிஞர்களாக (அமிக்கஸ் கியூரி) நியமிக்கப்பட்டுள்ளனர். கேரள அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பிரமாண பத்திரத்தில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் பெண்களை அனுமதிப்பதில் தவறில்லை என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் கேரள அரசின் கருத்திற்கு நேர்மாறாக திருவிதாங்கூர் தேசவம்போர்டு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில் சபரிமலையில் பெண்களை அனுமதிக்ககக்கூடாது என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

அப்போது கருத்து தெரிவித்த நீதிபதிகள், சபரிமலை கோயிலில் பெண்களை அனுமதிக்க மறுப்பது அரசியல் சாசனத்திற்கு எதிரானது என்று கூறியிருந்தனர். இந்நிலையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி நடந்த விசாரணை
நடந்தபோது சிறப்பு வழக்கறிஞர் ராமமூர்த்தி கூறுகையில் சபரிமலையில் தற்போது உள்ள எல்லா கட்டுப்பாடுகளும் அதேபோல் தொடரவேண்டும். சபரிமலையில் கடைபிடிக்கப்படும் ஆகம விதிகள் அரசியல் அமைப்பு வழங்கும் சம உரிமையை எந்த வகையிலும் பாதிக்கவில்லை.
ஒரு மத நம்பிக்கை அடிப்படையில்தான் சபரிமலையில் 10 முதல் 50 வயதிற்கு உட்பட்ட பெண்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது. மேலும் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் அரசியல் நிர்பந்தங்களால்தான் கேரள அரசு நிலைப்பாட்டை மாற்றியது என்று தெரிவித்தார். தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா கூறுகையில், சபரிமலையில் பெண்களை அனுமதிக்கும் விவகாரத்தில் மத நம்பிக்கையை கேள்வி கேட்க முடியாது. ஆனால் அந்த நம்பிக்கையில் உள்ள நம்பக தன்மையையும், வாதங்களில் உள்ள உண்மை நிலையையும் கேள்வி கேட்கலாம்.

இந்த விஷயங்களை முன்னிறுத்தி பெண்களை அனுமதிப்பதை எதிர்ப்பவர்களுக்கு மனுதாரர்கள் பதில் அளிக்கலாம் என்று கூறினார். நீதிபதி நாரிமன் கூறுகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆணுக்கும் பெண்ணும் சம உரிமை வழங்குவது அவசியமா என்பதை மனுதாரர்கள் நிரூபணம் செய்யவேண்டும் என்று கூறினார். இதனையடுத்து வழக்கின் விசாரணை முடிவிற்கு வந்துள்ள நிலையில் அனைத்து தரப்பினரும் தங்கள் எழுத்துபூர்வமான வாதங்களை ஒரு வாரத்தில் தாக்கல் செய்யவேண்டும் என்று கூறி தீர்ப்பு தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலில் 10 முதல் 50 வயதுக்கு உட்பட்ட பெண்களை அனுமதிக்க கோரும் வழக்கில், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு நாளை அதிரடியான தீர்ப்பு அளிக்கவுள்ளது.

DINASUVADU 

Recent Posts

நெல்லை : ‘அமரன்‘ படம் ஓடும் திரையரங்கில் குண்டு வீச்சு…போலீசார் தீவிர விசாரணை!

நெல்லை : தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியான அமரன் திரைப்படம் வெளியாகி 3-வது வாரமாக பல திரையரங்குகளில் ஓடிக்கொண்டு இருக்கிறது. படத்திற்கு…

38 mins ago

Live : சபரிமலை ஐயப்ப பக்தர்கள் முதல்., ஆளுநர் மாளிகை சர்ச்சை வரை…

சென்னை : இன்று கார்த்திகை மாதம் முதல் தேதியை முன்னிட்டு சபரிமலை ஐயப்ப பக்தர்கள் மாலை அணிந்து தங்கள் விரத…

38 mins ago

திரைத்துறையில் அடுத்த சோகம்… இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார்!

சென்னை : இளம் தமிழ் இயக்குனர் சுரேஷ் சங்கையா காலமானார். உடல் நலம் பிரச்சனையால் அவதிப்பட்டு வந்த அவர், நேற்று (வெள்ளிக்கிழமை)…

1 hour ago

தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்தம் செய்ய சிறப்பு முகாம்!

சென்னை : தமிழகம் முழுவதும் இன்று வாக்காளர் பட்டியல் திருத்துவதற்கு சிறப்பு முகாம் நடைபெறுகிறது. நாளை ஞாயிற்றுக்கிழமையும் முகாம் நடைபெறவுள்ளது.…

2 hours ago

குடை முக்கியம்!! இந்த 20 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மழை பெய்யும்!

சென்னை : மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடலோரப்பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.…

3 hours ago

சாமியே சரணம் ஐயப்பா!! மாலை அணிவித்து விரதத்தை தொடங்கிய பக்தர்கள்!

சென்னை : கேரள மாநிலத்தில் மிகவும் பிரசித்திபெற்ற சபரிமலையில் உள்ள ஐயப்பனுக்கு உகந்த கார்த்திகை மாதம் இன்று (16.11.2024) முதல்…

3 hours ago