“NDA கூட்டணியால் ‘I.N.D.I.A’ கூட்டணியை வீழ்த்த முடியுமா..? – மம்தா பானர்ஜி

Mamata Banerjee

எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியாவை எதிர்க்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தைரியம் உள்ளதா? மம்தா பானர்ஜி பேட்டி.

பெங்களுருவில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனைக் கூட்டத்துக்கு பின் கூட்டாக செய்தியாளர் சந்திப்பில் பேசினர். அப்போது மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசுகையில், நாடு பாதுகாக்கப்பட வேண்டுமென்றால் எதிர்க்கட்சிகள் வெற்றி பெற வேண்டும். இதற்காக கருத்து வேறுபாடுகளை மறந்து, ஓரணியில் இணைந்துள்ளோம்.

எங்களது இந்த முயற்சி வெற்றி பெறும், அதற்கான முதற்படி பெங்களூருவில் இன்று தொடங்கியுள்ளது என கூறி, எங்கள் இந்தியா கூட்டணியை வீழ்த்த முடியுமா என பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கு சவால் விடுத்தார் மம்தா. மேலும், பேசுகையில், இன்று மத்திய அரசு செய்யும் ஒரே வேலை அரசுகளை விலைக்கு வாங்குவது மட்டுமே. நாங்கள் எங்கள் தாய்நாட்டை நேசிக்கிறோம், நாங்கள் தேசபக்தர்கள்.

ஏழைகள், விவசாயிகளுக்காக தோள் கொடுத்து நாட்டை அழிவு பாதையில் இருந்து காக்க வேண்டும். இந்தியா கூட்டணியின் வெற்றி, ஒட்டுமொத்த  தேசத்தின் வெற்றி.  எதிர்க்கட்சிகளின் கூட்டணியான இந்தியாவை எதிர்க்க தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தைரியம் உள்ளதா? என சவால் விடுத்த மம்தா, எதிர்க்கட்சிகளின் கூட்டணி நாட்டுக்காகவும், மக்களுக்காகவும் அமைந்துள்ளது.

எதிர்க்கட்சிகளின் பிரச்சாரம், கூட்டம் என அனைத்து இந்தியா என்ற பெயரிலேயே நடைபெறும் என்றும் இந்தியாவை பேரழிவில் இருந்து காப்பாற்றுவோம் எனவும் உறுதி அளித்தார். எதிர்க்கட்சி கூட்டணியாக இந்தியா வெற்றி பெறும், இந்திய நாடு வெற்றி பெறும், பாஜக தோல்வி அடையும் என்றார். பாஜகவுக்கு எதிரான எதிர்க்கட்சிகள் கூட்டணிக்கு ‘இந்தியா’ (Indian National Democratic Inclusive Alliance) என பெயர் வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்