யாரோ இருமுராங்கபா ? கோவிட் 19-க்கு எதிராக களமிறங்கிய ஜியோ..!
கோவிட் 19 பாதிப்பு உலகமுழுவதும் 90 நாடுகளை தாக்கியுள்ளது . சீனாவில் தொடங்கிய இந்த கோவிட் 19 பாதிப்பு இந்தியாவையும் விட்டுவைக்கவில்லை கடந்த வாரம் கோவிட் 19 வைரசால் 31 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக உறுதிசெய்யப்பட்டு தீவிர கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர் .
ஜியோ vs கோவிட் 19
ஜியோ நிறுவனம் கோவிட் 19 பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த புதிய வழியை கையாண்டு வருகிறது.எந்தவொரு நெட்வொர்க்கிலிருந்தும் ஜியோ க்கு அழைக்கும் போது ஒருவர் இருமுவது போன்று சத்தத்துடன் கோவிட் 19 பற்றிய விழிப்புணர்வை சொல்கிறது .இதில் இந்தியாவில் பாதிக்கப்பட்டுள்ள 31 பேருக்கு எடுக்கப்பட்டுள்ள தடுப்பு நடவடிக்கைகள் குறித்த செய்தியைக் கேட்கலாம்.
“கோவிட் 19 பரவுவதற்கு எதிரான தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக, மத்திய அரசு அழைப்புக்கு முந்தைய விழிப்புணர்வு செய்தியை வெளியிட்டுள்ளதாக ஒரு சுகாதார அதிகாரி கூறியதாக செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ வெளியிட்டுள்ளது .
தமிழகம் மற்றும் கேரளாவில்
தமிழக அரசு விமான நிலையங்களில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுவருகிறது .இன்று வரை தமிழகத்தில் கோவிட் 19 பாதிக்கப்பட்டோர் எவருமில்லை என்பது குறிப்பிடத்தக்கது .
இதற்க்கு முன்னதாக கேரளாவில் 3 பேர் சீனாவில் இருந்து வைத்த 3 பேருக்கு கோவிட் 19உறுதி செய்யப்ட்டு தீவிர சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பியுள்ளனர் .இதற்க்கு கேரளா அரசும் மாநில பேரிடராக அறிவித்து வைரஸ் பரவுவதை தடுத்தது.
வாட்ஸப் மூலம் விழிப்புணர்வு
இதற்கு முன்னதாக மும்பையை சேந்த Haptik என்ற நிறுவனம் வாட்ஸப்பில் கோவிட் 19 குறித்து விழிப்புணர்வுக்கான பிரத்தேக என்னை +91-93213-98773 வெளியிட்டுள்ளது .இதற்க்கு மெசேஜ் அனுப்பும் பொழுது AI தொழிநுட்பம் மூலம் நாம் கேட்க்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது .