Categories: இந்தியா

சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது …!விரைவில் உச்சநீதிமன்றத்தில் மனு …!தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார்

Published by
Venu

சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது என்று தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.
கடந்த செப்டம்பர் 28 ஆம்  தேதி  கேரளா மாநில சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு அனைத்து வயது பெண்களும் சென்று வழிபடலாம் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இந்த தீர்ப்பை செயல்படுத்துவதற்கு இந்து அமைப்புகளும், ஐயப்ப பக்தர்கள் சங்கமும் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழகம், கேரளத்தில் பல்வேறு பகுதிகளில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றது.
Image result for சபரிமலை உச்ச நீதிமன்றம்
பல போராட்டங்களுக்கு மத்தியில் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் விளக்கம் ஒன்றை அளித்தார்.அவர் கூறுகையில், எந்த அரசியல் கட்சிகளுக்கும் பின்னால் திருவிதாங்கூர் தேவசம் போர்டு செல்லவில்லை.சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்தால் போராட்டக்காரர்கள் போராட்டத்தை கைவிட தயாரா? என்று  தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கேள்வி எழுப்பினார்.சபரிமலை கோயில் விவகாரத்தில் சமரசத்துக்கு தேவசம் போர்டு தயாராக இருக்கிறது  என்று திட்டவட்டமாக தெரிவித்தார்.

இதற்கு கேரள அரசும்  தேவசம் போர்டு எடுக்கும் முடிவுக்கு  எந்த முடிவும் எடுக்கலாம் என்று  தெரிவித்தது.
இன்று திருவனந்தபுரத்தில் சபரிமலை விவகாரத்தில் சீராய்வு மனு தாக்கல் செய்வது தொடர்பாக தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தலைமையில்  ஆலோசனை நடைபெற்றது.
இந்த ஆலோசனைக்கு பின்னர் தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் கூறுகையில் ,சபரிமலை விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தை அணுக முடிவு செய்யப்பட்டுள்ளது.சபரிமலை கோவிலில் நடைபெற்ற சம்பவங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.சபரிமலையில் 2 நாள் நடந்த நிகழ்வுகள் குறித்து உச்சநீதிமன்றத்தில் அறிக்கை அளிக்கப்படும். நீதிமன்றத்தை நாட முடிவெடுத்திருப்பதால் பக்தர்கள் அமைதி காக்க வேண்டும் .
தேவசம் போர்டு எடுத்திருக்கும் முடிவுகளுக்கு கேரள அரசு ஒத்துழைப்பு தர வேண்டும்.வழக்கறிஞர்கள் உடன் ஆலோசித்த பின்னர் எப்போது மனுதாக்கல் செய்யப்படும் என்று அறிவிக்கப்படும்.அதேபோல்  சபரிமலையை கலவர பூமியாக மாற்ற அனுமதிக்க முடியாது என்றும்  தேவசம் போர்டு தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார்.

Published by
Venu

Recent Posts

வாஜ்பாய் யாரென்று தெரியுமா? நெகிழ்ச்சியுடன் நீண்ட நினைவுகளை பகிர்ந்த பிரதமர் மோடி!

டெல்லி : இன்று மறைந்த முன்னாள் இந்திய பிரதமரும், பாஜக மூத்த தலைவருமான அடல் பிகாரி வாஜ்பாயின் 100வது பிறந்தநாள்…

1 hour ago

இதை செய்தால் விசிக போராட்டத்தில் நான் பங்கேற்க தயார்! அண்ணாமலை பதில்!

சென்னை : மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, கடந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் அம்பேத்கர் குறித்து பேசுகையில், அம்பேத்கர் குறித்து…

2 hours ago

மகளிர் ஒருநாள் கிரிக்கெட் : வெஸ்ட் இண்டீசை வீழ்த்தி தொடரை கைப்பற்றிய இந்தியா!

குஜராத்:  இந்திய மகளிர் கிரிக்கெட் அணி தற்போது மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் 3 ஒருநாள் போட்டிகள்…

2 hours ago

உலக அதிசயங்களில் ஒன்றான ஈபிள் டவரில் தீ விபத்து.!

பிரான்ஸ்: பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தின் முதல் மற்றும் இரண்டாவது தளங்களுக்கு இடையில் லிஃப்ட் தண்டுகளில் தீ விபத்து ஏற்பட்டது.…

3 hours ago

LIVE: தமிழகத்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் முதல் திரையரங்குகளில் கட்டண உயர்வு வரை.!

சென்னை: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

4 hours ago

தூத்துக்குடி உட்பட தமிழ்நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் விழா கோலாகலம்!

தூத்துக்குடி: இயேசு கிறிஸ்து பிறப்பே கிறிஸ்துமஸாக உலகம் முழுவதும் ஆண்டுதோறும் டிச.25ஆம் தேதி கிறிஸ்தவர்களால் வெகு விமர்சையாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.…

4 hours ago