நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பதவி வகிக்க முடியுமா…!பிரதமர் நரேந்திர மோடி
நேரு குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக காங்கிரஸ் கட்சி பார்த்தது இல்லை என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
வருகின்ற 20-ஆம் தேதி சத்தீஷ்கர் மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால் அம்பிகாபூரில் பிரதமர் நரேந்திர மோடி பிரச்சார கூட்டத்தில் பங்கேற்று பேசினார்.அப்போது அவர் பேசுகையில், நேரு குடும்பத்தை சாராத ஒருவரை தலைவராக காங்கிரஸ் கட்சி பார்த்தது இல்லை.அதேபோல் நேரு குடும்பத்தை சாராத ஒருவர் காங்கிரஸ் கட்சியின் தலைவராக தொடர்ந்து 5 ஆண்டுகள் பதவி வகிக்க முடியுமா என்றும் கேள்வி எழுப்பினார். தேர்தல் தோல்விகளை காங்கிரஸ் கட்சி ஏற்க மறுக்கிறது என்றும் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.