கொசுக்கள் மூலம் கொரோனா பரவுமா? மத்திய அரசு விளக்கம்!

Default Image

 தற்போது நாடெங்கு கொரோனா வைரஸின் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், இதுகுறித்த பல வதந்தியான செய்திகளும் பரவி வருகிறது. இந்த வதந்திகள், கொரோனா கொசுக்கள் மூலம் பரவுகிறது என கூறப்படுகிறது. 

இதுகுறித்து விளக்கமளித்துள்ள மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம், கொரோனா வைரஸ் கொசுக்கள் மூலம் பரவாது எனவும், வைரஸ் தொற்று கொண்ட ஒருவர் மூலம்தான் பரவும் என கூறியுள்ளனர். குறிப்பாக வைரஸ் தொற்று கொண்ட நபர் ஒருவருக்கு, அதற்கான அறிகுறிகள் இல்லை என்றாலும் அந்த நபர் மூலம் பரவும் என உறுதிபடுத்தி இருக்கிறது.

மேலும், எல்லாரும் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் விளக்கம் அளித்து இருக்கிறது. குறிப்பாக காய்ச்சல், குளிர், இருமல் போன்ற அறிகுறிகளை கொண்டவர்கள், சுகாதார பணியாளர்கள், வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டவர்களை கண்காணிக்கும் பணியாளர்கள் ஆகியோர் மட்டுமே முகக்கவசம் அணிய வேண்டும்  என்றும், மற்றவர்கள் முகக்கவசம் அணிய தேவையில்லை எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்