காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மணிப்பூர் முதல் மும்பை வரை “இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை” என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகிறார். கடந்த 14-ம்தேதி மணிப்பூரில் இருந்து யாத்திரையை தொடங்கிய ராகுல் காந்தி நேற்று அசாம் வந்தடைந்தார்.
அசாமில் நுழைந்தது முதல்அம்மாநில முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை மீது தொடர்ந்து ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு வருகின்றன. அசாம் மாநிலத்தில் யாத்திரைக்கு தலைமை தாங்கி வரும் ராகுல் காந்தி கடந்த இரண்டு நாட்களாக நடந்த பல பொதுக்கூட்டங்களில் அம்மாநில முதல்வரை “நாட்டின் மிகவும் ஊழல் நிறைந்த முதல்வர்” என்று குற்றச்சாட்டி வருகிறார்.
அசாமில் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிய ராகுல்காந்தி “மணிப்பூரை பிரிக்கும் வேலையை பிரதமர் மோடி செய்துள்ளார். எனவே மணிப்பூரில் இருந்து இந்தப் பயணத்தை ஆரம்பித்து நாகாலாந்து சென்றோம். அசாமில் அதிகரித்து வரும் வேலையில்லா திண்டாட்டம் குறித்து கேள்வி எழுப்பிய அவர், எவ்வளவு பட்டம் பெற்றாலும் இங்கு வேலை வாய்ப்பு கிடைக்காது என்றார். ஊழலில் ஈடுபடுவது எப்படி என்பது குறித்து பாஜக ஆளும் மற்ற மாநிலங்களின் முதல்வர்களுக்கு சர்மாவால் கற்றுக்கொடுக்க முடியும் என கூறினார்.
மியான்மர் எல்லையில் விரைவில் தடுப்பு வேலி அமைக்கப்படும்… அமித் ஷா அறிவிப்பு!
அவர் அஸ்ஸாமுக்கு வேலை செய்யவில்லை, மாறாக பிரதமர் மோடி என்ன சொன்னாலும் அதைச் செய்வார். பல மாதங்களாக வன்முறை நடந்து வருவதால் மணிப்பூரில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கினேன். அங்கு மக்கள் கொல்லப்படுகின்றனர். பிரதமர் மணிப்பூருக்கு செல்லவில்லை, ஏனென்றால் அவர் அங்கு சென்றால், பாஜகவின் உண்மை அனைவருக்கும் தெரியவரும்” என கூறினார்.
காந்தி குடும்பம் என்று சொல்லப்படும் குடும்பத்தில் இருந்து வரும் எந்த ஒரு தரக்குறைவான விஷயத்தையும் நான் பாக்கியமாக கருதுகிறேன். ஏனென்றால், தன்னை மிகவும் சக்தி வாய்ந்ததாகக் கருதும் குடும்பத்தை எதிர்த்துப் போராடும் வலிமையை அது எனக்கு அளிக்கிறது.
இந்நிலையில், ராகுல் காந்தி குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா, நான் ஒன்றை மட்டும் கேட்க விரும்புகிறேன், காந்தி குடும்பத்தை விட ஊழல்வாதியாக யாராவது இருக்க முடியுமா..? போஃபர்ஸ் ஊழல், நேஷனல் ஹெரால்டு ஊழல், போபால் எரிவாயு துயரம், 2ஜி ஊழல், நிலக்கரி ஊழல் போன்றவை அவர்களின் ஊழல் பட்டியலில் உள்ளது என கூறினார்.
ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் L.B. நகர் கமினேனி மருத்துவமனையில் தானம் செய்யப்பட்ட இதயத்தை மருத்துவ பணியாளர்கள் 13 கிலோ…
சென்னை: சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உச்சம் தொட்டு வரும் நிலையில், இன்று சற்று ஆறுதல் அளிக்கும் வகையில்…
டெல்லி : இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடிய பார்டர் கவாஸ்கர் கிரிக்கெட் தொடரில் இந்திய அணியின்…
நியூ யார்க் : அமெரிக்காவில் டிக் டாக் செயலிக்கு தடை விதிக்கும் நாள் நெருங்கிவிட்டது என்றே கூறவேண்டும். அதற்கான உறுதி…
சென்னை : தென் தமிழகத்தில் முதல் 'மினி டைடல் பார்க்'-ஐ கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தூத்துக்குடியில் திறந்து…
டெல்லி: இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராஃபி கோப்பைக்கான இந்திய அணியை கேப்டன் ரோஹித் ஷர்மா, தேர்வுக்குழு…