பாஜக சார்பாக பிரச்சாரம்…சுதீப் முடிவால் அதிர்ச்சி அடைந்தேன்…பிரகாஷ் ராஜ் வேதனை.!
கன்னட திரைப்பட நடிகர் கிச்சா சுதீப் கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் பாஜகவுக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்ய உள்ளதாக நேற்று அறிவித்திருந்தார். இதனையடுத்து, ரசிகர்கள் நேற்று டிவிட்டரில் #WeDontwantKicchalnPolitics ஹேஷ்டாகை இந்தியளவில் ட்ரெண்டாக்கினார்கள்.
“உங்களிடம் இருந்து நல்ல படங்களை மட்டுமே நாங்கள் எதிர்பார்க்கிறோம் தயவு செய்து அரசியலுக்கு வராதீர்கள்” என சுதீப் ரசிகர்கள் வேண்டுகோள் வைத்தனர். ரசிகர்களை போல சினிமா பிரபலங்கள் பலரும் சுதீப்பின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள்.
அந்த வகையில், பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் தனது ட்வீட்டர் பக்கத்தில் கிச்சா சுதீப் பாஜகவிற்கு ஆதரவளித்ததை கண்டு தான் அதிர்ச்சியடைந்ததாக நடிகர் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது ‘கிச்சா சுதீப்பின் அறிக்கையை அறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்’ என பதிவிட்டுள்ளார்.