இன்று மாலையுடன் ஓய்கிறது இரண்டாம் கட்ட தேர்தல் பிரச்சாரம்.!
LokSabha Elections 2024: மக்களவை 2ஆம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் ஓய்கிறது.
2ஆம் கட்ட மக்களவைத் தேர்தலுக்கான பிரச்சாரம் இன்றுடன் (ஏப்ரல் 24) முடிவடைகிறது. கேரளா, கர்நாடகா, உத்தர பிரதேசம் உள்ளிட்ட 13 மாநிலங்களில் 89 தொகுதிகளுக்கு நாளை மறுநாள் (ஏப்ரல் 26ஆம் தேதி) வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த தேர்தல் போட்டியிட கடந்த 3ம் தேதி அனைவரும் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
இதனை தொடர்ந்து வேட்பாளர்கள் புயலாய் பரப்புரையில் ஈடுபட்டு வந்தனர். இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. இதனால், வேட்பாளார்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
2ஆம் கட்டப் பிரச்சாரத்தின் கடைசி நாளான இன்று காங்கிரஸ் கட்சியின் முன்னாள் ராகுல் காந்தியும், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் மகாராஷ்டிர மாநிலம் அமராவதிக்கு வருகை தருகிறார்கள்.
இன்றைய தினம் இறுதி நாள் என்பதால், அந்தந்த கட்சிகளின் நட்சத்திர வேட்பாளர்கள் தங்களது கட்சியின் வேட்பாளருக்கு ஆதரவு தெரிவித்து இறுதி பேரணிகள் மூலம் தங்கள் வாக்குகளை சேகரிப்பார்கள். தேர்தல் பிரசாரம் ஓய்ந்த பிறகு, பிரச்சாரம் செய்ய வந்த வெளியூர் ஆட்கள் யாரும் தொகுதியில் இருக்க கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்ட தேர்தல் நடைபெறும் மாநிலங்கள்:
அசாம், பீகார், சத்தீஸ்கர், கர்நாடகா, கேரளா, மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, மணிப்பூர், ராஜஸ்தான், திரிபுரா, உத்தரப் பிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் ஜம்மு மற்றும் காஷ்மீர் ஆகிய மாநிலங்களுக்கு ஏப்ரல் 26ஆம் தேதி தேர்தல் நடைபெறவுள்ளது.