ஆன்லைன் பாதுகாப்பு குறித்து அரசு சார்பில் பிரச்சாரம்- மத்திய அமைச்சர்.!
டிஜிட்டல் முன்னேற்றம் மற்றும் ஆன்லைன் பாதுகாப்பு குறித்து அரசாங்க சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும், மத்திய அமைச்சர் அறிவிப்பு.
இந்தியா ஜி-20 (G-20) மாநாடுகளின் தலைமை பொறுப்பை ஏற்றதன் ஒரு பகுதியாக மத்திய அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், G-20 டிஜிட்டல் கண்டுபிடிப்பு கூட்டணி (DIA) மற்றும் ஆன்லைனில் பாதுகாப்பாக இருங்கள் என்பது குறித்து பிரச்சாரத்தை தொடங்கினார்.
தற்போது பெருகிவரும் ஆன்லைன் மோசடிகள் மற்றும் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், டிஜிட்டல் உலகில் பாதுகாப்பாக இருக்க அரசு சார்பில் தொடங்கப்பட்ட இந்த பிரச்சாரம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
மேலும் G-20 நாடுகள் மற்றும் மாநாட்டிற்கு அழைக்கப்பட்ட நாடுகளின், ஆரம்பநிலை நிறுவனங்களால் உருவாக்கப்பட்ட டிஜிட்டல் தொழில்நுட்பங்களை ஏற்றுக்கொள்வதை DIA நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அஷ்வினி வைஷ்ணவ், மேலும் கூறினார்.