பிரதமர் மோடிக்கு அழைப்பு ! டெல்லி முதல்வராக 3-முறையாக பதவியேற்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்

Published by
Venu

அரவிந்த் கெஜ்ரிவால் 3-முறையாக டெல்லி முதல்வராக நாளை பதவி ஏற்க உள்ளார். 

70 உறுப்பினர்கள் கொண்ட டெல்லி சட்டப் பேரவைக்கான தேர்தல் நடைபெற்று முடிந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை முடிவில் ,மொத்தமுள்ள 70 தொகுதிகளில் 62 தொகுதிகளில் ஆம் ஆத்மி கட்சி அதிகாரபூர்வமாக வெற்றி பெற்றது.பாஜக 8 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது என அறிவிக்கப்பட்டது.எனவே ஆம் ஆத்மி கட்சி ஆட்சியமைப்பது உறுதியானது.எனவே ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் நாளை  மூன்றாவது முறையாக டெல்லி முதலமைச்சராக பதவியேற்க உள்ளார்.இதற்காக ராம்லீலா மைதானத்தில் முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.நாளை கெஜ்ரிவால் முதல்வராக பதவியேற்கிறார்.இவருடன் புதிய அமைச்சர்களும் பதவியேற்க உள்ளனர்.

இந்த விழாவில்  பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள டெல்லி மக்களுக்கும், கெஜ்ரிவால் அழைப்பு விடுத்து உள்ளார்.குறிப்பாக பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க குட்டி கெஜ்ரிவாலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ‘மினி மஃப்ளர் மேன்’ என்று அழைக்கப்படும் குழந்தை டெல்லி தேர்தலின் வாக்கு எண்ணிக்கை அன்று மிகவும் பிரபலமாக இருந்தார் .இந்த குழந்தையின் புகைப்படம் சமூக வலைதங்களில் வைரலானது குறிப்பிடத்தக்கது.

 

Recent Posts

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

மாநில சுயாட்சியை உறுதி செய்ய உயர்நிலைக் குழு -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

சென்னை : தமிழக சட்டப்பேரவை  கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர்…

51 minutes ago

தோத்தாலும் போராடிட்ட கண்ணா! ரிஷப் பண்டை பாராட்டிய லக்னோ உரிமையாளர்!

லக்னோ :  பொதுவாகவே லக்னோ அணியின் உரிமையாளர் சஞ்சீவ் கோயங்கா ஒரு போட்டியில் அணி தோல்வி அடைந்தாள் கூட மிகவும்…

1 hour ago

“இனி கட்சிப் பதவிகளில் ஈடுபட மாட்டார்”…பகுஜன் சமாஜ் கட்சி பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங் மனைவி நீக்கம்!

சென்னை : பகுஜன் சமாஜ் கட்சியின் (பிஎஸ்பி) தமிழ்நாடு மாநில ஒருங்கிணைப்பாளர் பதவியில் இருந்து ஆம்ஸ்ட்ராங்கின் மனைவி பொற்கொடி நீக்கப்பட்டுள்ளார். ஆம்ஸ்ட்ராங்…

3 hours ago

பெண்களின் வரலாற்று விண்வெளி பயணம்! பிரபல பாப் பாடகர் கேட்டி பெர்ரி உட்பட 6 பேர்!

டெக்ஸாஸ் : வரலாற்றில் முதல் முறையாக, பெண்கள் மட்டுமே அடங்கிய ஆறு பேர் கொண்ட குழு, புளூ ஒரிஜின் (Blue…

3 hours ago

Live : தமிழக சட்டப்பேரவை நிகழ்வுகள் முதல்.., சர்வதேச அரசியல் நகர்வுகள் வரை…

சென்னை : கடந்த ஏப்ரல் 10ஆம் தேதி முதல் நேற்று (ஏப்ரல் 14) வரை 5 நாட்கள் தொடர் விடுமுறையை…

3 hours ago

தமிழ் சினிமாவில் சோகம்! பிரபல இயக்குனர் திடீர் மரணம்!

சென்னை : தனுஷ் நடிப்பில் உருவான புதுக்கோட்டையிலிருந்து சரவணன், ஸ்ரீகாந்த், ஸ்னேகா நடித்த ஏப்ரல் மாதத்தில் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கி…

4 hours ago