கடந்த இரண்டு மாத ஊரடங்குக்கு பின்பு கொல்கத்தாவில் துவங்கிய விமான சேவை.
உலகை அச்சுறுத்தும் கொரோனா வைரஸ் காரணமாக பல இடங்களில் 144 தடை உத்தரவு கடந்த 50 நாட்களுக்கு மேலாக போடப்பட்டுள்ளது. இந்தியாவில் 4 கட்டங்களாக ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், ஊரடங்கு காரணமாக கடந்த 2 மாதங்களாக கொல்கத்தாவில் விமான சேவைகள் அனைத்தும் ரத்து செய்யபட்டது. தற்பொழுது, தளர்வுகளை அரசு அறிமுகமப்படுத்தியுள்ளதால் விமான சேவைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மாத இடைவெளிக்கு பிறகு தற்பொழுது கொல்கத்தாவில் விமான சேவைகள் துவங்கியுள்ளது.