வடகிழக்கு பகுதிகளில் போராட்டம் – பிரதமர் மோடி ஆலோசனை
- குடியுரிமை சட்ட திருத்த மசோதா இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.
- குடியுரிமை மசோதாவிற்கு எதிராக போராட்டம் நடந்துவரும் நிலையில் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
குடியுரிமை சட்ட திருத்த மசோதாவை மக்களவை மற்றும் மாநிலங்களவை என இரு அவைகளிலும் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்தார்.இரு அவைகளிலும் மசோதாவை தாக்கல் செய்ய எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தது.எதிர்ப்புக்கு மத்தியில் இரு அவைகளிலும் நடைபெற்ற வாக்கெடுப்பில் மசோதாவிற்கு ஆதரவாக அதிக வாக்குகள் கிடைத்தது.இதனால் இரு அவைகளிலும் மசோதா நிறைவேறியது.ஆனால் வடகிழக்கு மாநிலங்களில் இந்த மசோதாவிற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது.இதன் விளைவாக அசாம் ,திரிபுரா,சிக்கிம் உள்ளிட்ட மாநிலங்களில் பல இடங்களில் போராட்டம் நடைபெற்று வருகிறது.அசாமில் போராட்டம் தீவிரமடைந்த நிலையில் அங்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது.அங்கு பாதுகாப்புக்காக துணை ராணுவப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் குடியுரிமை மசோதாவிற்கு எதிராக வடகிழக்கு பகுதிகளில் போராட்டம் நடந்துவரும் நிலையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா, பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் உடன் பிரதமர் மோடி ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.