‘புரெவி’ புயல் முன்னெச்சரிக்கை ! தமிழ்நாடு, கேரளா செயலாளர்களுடன் ஆலோசனை
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு, கேரளா மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய கேபினெட் செயலாளர் ராஜீவ் கவுபா காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை காலை ‘புரெவி‘ புயலாக வலுப்பெறுகிறது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதனால் ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி,கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழை முதல் அதீத கனமழை வரை பெய்யக் கூடும்.வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை மாலையில் அங்கிருந்து மன்னார் வளைகுடா வழியாக 4-ஆம் தேதி அதிகாலை கன்னியாகுமரி- பாம்பன் இடையில் தென் தமிழக கடற்கரையை கடக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.இதைத் தொடர்ந்து தமிழகம் மற்றும் கேரளாவிற்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்ட்டுள்ளது.
இந்நிலையில் தேசிய பேரிடர் மேலாண்மை குழு கூட்டத்தில் ‘புரெவி‘ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழ்நாடு, கேரளா மாநில தலைமைச்செயலாளர்களுடன் மத்திய கேபினெட் செயலாளர் ராஜீவ் கவுபா காணொலிக் காட்சி வாயிலாக ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.