கர்நாடகா அமைச்சரவை; அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!

Karnataka Cabinet

கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சி அமைத்த நிலையில், அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகாவில் காங்கிரஸ்  பொறுப்பேற்றுள்ள நிலையில், புதிதாக பதவியேற்றுள்ள அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி, முதல்வர் சித்தராமையாவுக்கு நிதித்துறையும், கேபினட் விவாகாரத்துறையும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. துணை முதல்வர் டி.கே.சிவக்குமாருக்கு நீர்வளத்துறை, பெங்களூரு நகர வளர்ச்சித்துறை ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் மகன் பிரியங்க் கார்கேவுக்கு ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறையும், தினேஷ் குண்டுராவுக்கு சுகாதாரத்துறை, மதுபங்காரப்பாவுக்கு பள்ளிக்கல்வித்துறையும், எச்.கே.பாட்டீலுக்கு சட்டம் மற்றும் நாடாளுமன்ற விவகாரங்களும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இன்று கர்நாடகாவில் புதிதாக 24 அமைச்சர்கள் பதவியேற்ற பிறகு, அமைச்சரவை அதன் வரம்பு 34-ஆக அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கையில் கடந்த வாரம் மற்ற 8 சட்டமன்ற உறுப்பினர்களுடன் பதவியேற்ற முதல்வர், துணை முதல்வர் அடங்குவர். எனவே, கர்நாடக அமைச்சரவையில் 34 பேருக்கு இலக்காக்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த அமைச்சர்களின் இறுதிப் பட்டியலில் லிங்காயத் சமூகத்தைச் சேர்ந்த 8 பேர், பட்டியலினச் சமூகத்தைச் சேர்ந்த 7 பேர், வொக்கலிகர்கள் 5 பேர், 2 முஸ்லிம்கள், மூன்று பழங்குடியினத்தைச் சேர்ந்த 3 பேர், பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த 6 பேர், ஒரு மராத்தா, ஒரு பிராமணர், ஒரு கிறிஸ்தவர் மற்றும் ஒரு ஜெயின் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

இதனிடையே, டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் உயர் அதிகாரிகளுடன் பல கட்ட ஆலோசனைகளுக்குப் பிறகு அமைச்சர்கள் தேர்வு செய்யப்பட்டது. சித்தராமையா மற்றும் சிவக்குமார் ஆகிய இருவரும் டெல்லியில் காங்கிரஸ் தலைவர் கார்கே மற்றும் மாநில பொறுப்பாளர் ரன்தீப் சுர்ஜேவாலா மற்றும் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் ஆகியோருடன் சந்தித்து ஆலோசனை நடத்தியிருந்தனர்.

ministers portfolios
[Image Source : Twitter/@GauravSavad]

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்