கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம்..!

siddaramaiah cm

கர்நாடக முதல்வர் சித்தராமையா தலைமையில் இன்று அமைச்சரவைக்கூட்டம் நடைபெறவுள்ளது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்தது. பின்னர், கர்நாடகா முதல்வராக சித்தராமையா மற்றும் துணை முதல்வராக டி.கே. சிவக்குமார் பதவியேற்றனர்.

இதனையடுத்து, கர்நாடக அரசின் முதல் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றவுடன், காங்கிரஸ் கட்சி அளித்த 5 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று ராகுல் காந்தி கூறிய நிலையில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்ற மாநில அரசு முடிவு செய்துள்ளதாக கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், கர்நாடக முதல்வர் சித்தராமையா 2023ஆம் ஆண்டுக்கான முதல் மாநில அமைச்சரவைக் கூட்டத்திற்கு அழைப்பு விடுத்திருந்த நிலையில், இன்று (ஜூன் 2ம் தேதி) காலை 11:00 மணிக்கு விதான்சௌதா மண்டபத்தில் அமைச்சரவை கூட்டம் நடைபெறவுள்ளது.

இதில் துணை முதலமைச்சர் டி.கே. சிவக்குமார் உட்பட அமைச்சர்கள் பலரும் பங்கேற்கவுள்ளனர். இந்த கூட்டத்தில் காங்கிரஸ் அளித்த 5 வாக்குறுதிகளையும் நிறைவேற்றுவது குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்