பிரதமர் தலைமையில் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நாளை மறுநாள் காலை 11 மணி அளவில் நடைபெற உள்ளதாக பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. கூட்டத்தில் நாட்டின் கொரோனா பாதிப்பு உள்ளிட்ட முக்கிய விஷயங்கள் குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் ஆன்லைனில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கூட்டத்தில் பங்கேற்கும் அனைத்து அமைச்சர்களும் வீடியோ கான்பரன்சிங் மூலம் கலந்து கொள்வார்கள். இன்று காலை சுகாதார அமைச்சகம் வெளியிட்ட அறிக்கைப்படி கடந்த 24 மணி நேரத்தில் இந்தியாவில் 37,379 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 11,007 பேர் குணமடைந்துள்ளனர். இருப்பினும், 124 உயிரிழந்துள்ளனர். ஓமைக்ரான் நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1892 ஆக உயர்ந்துள்ளது. 766 பேர் குணமடைந்துள்ளனர்.
சென்னை : அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் குட் பேட் அக்லி. இந்த திரைப்படம் வரும்…
லக்னோ : இன்றைய ஐபிஎல் போட்டியில் ரிஷப் பண்ட் தலைமையிலான லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், ஹர்திக் பாண்டியா தலைமையிலான…
சென்னை : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட், கடந்த ஞாயிற்று கிழமை ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில்…
சென்னை : நடிகராக மட்டுமல்லாமல் தனக்கு பிடித்த கார் பந்தைய போட்டிகளிலும் தனது திறனை வெளிக்காட்டி வருகிறார் நடிகர் அஜித்…
லக்னோ : ஐபிஎல் 2025-ன் இன்றைய ஆட்டத்தில் லக்னோ சூப்பர் ஜெயிண்ட்ஸ் அணியும், மும்பை இந்தியன்ஸ் அணியும் மோதுகின்றன. இன்றைய…
சென்னை : டெல்லி நாடாளுமன்றத்தில் நேற்று நள்ளிரவு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கடும் எதிர்ப்புகளை மீறி வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை…