இன்று அமைச்சரவை கூட்டம் .! ரூ.20 லட்சம் கோடி பொருளாதார ஊக்குவிப்பு திட்டம் குறித்த ஆலோசனை..?

Default Image

இன்று  காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது.

டெல்லியில் இன்று  காலை 11 மணிக்கு பிரதமர் மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. நாட்டில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா தடுப்புப்பணி குறித்து இந்த அமைச்சரவையில் விவாதிக்கப்படும் என்றும் சுயசார்பு பாரதம் என்ற பெயரில் அறிவித்த, ரூ.20 லட்சம் கோடி நாட்டின் பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கட்டங்களாக வெளியிட்டார்.

இந்த பொருளாதார ஊக்குவிப்பு திட்டங்களை செயல்படுத்துவது பற்றி இந்த அமைச்சரவையில் விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், அமைச்சரவை கூட்டத்தில் ரயில், விமான போக்குவரத்து குறித்து முக்கிய முடிவு எடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்