புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கியது!
அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம்.
புதுச்சேரியில் முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசு பள்ளி மாணவர்களுக்கான 10% உள் ஒதுக்கீடு உள்ளிட்டவை குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உள்ஒதுக்கீடு குறித்த கோப்புக்கு ஒப்புதல் அளிக்கப்படாத நிலையில், தற்போது உள்ஒதுக்கீடு வழங்குவது குறித்து முதலமைச்சருக்கு துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பரிந்துரைத்தார்.
அரசு பள்ளி மாணவர்களுக்கான 10% உள் ஒதுக்கீடு வழங்குவது குறித்து முடிவெடுக்க முதலமைச்சர் ரங்கசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம் கூடியுள்ளது. இஇதுதொடர்பாக புதுச்சேரி துணைநிலை ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டு, உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன், நடப்புக் கல்வி ஆண்டிலேயே 10 சதவீத உள்ஒதுக்கீடு அமல்படுத்தப்படும் என எதிர்பார்க்கபடுகிறது.