பிரதமர் மோடி தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம்..!
![Default Image](https://dinasuvadu.com/wp-content/uploads/2024/02/Logo.png)
- தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு, மத்திய அமைச்சரவைக் கூட்டம்.
- மத்திய அமைச்சரவைக் கூட்டமானது காணொலி மூலம் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் குறைந்து வருகிறது. இருப்பினும், கொரோனா பரவலைக் கட்டுப்படுத்துவது தொடர்பாக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், கொரோனா தொற்று பரவலை மேலும் கட்டுப்படுத்துவது தொடர்பாக தலைநகர் டெல்லியில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று காலை 11 மணிக்கு, மத்திய அமைச்சரவைக் கூட்டமானது காணொலி மூலம் நடைபெறவுள்ளது.
இந்தக் கூட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, கொரோனா பாதிப்பு நிலவரம், மேலும், பிரதமர் மோடி அறிவித்த மாநிலங்களுக்கு இலவச தடுப்பூசி விநியோகம், தீபாவளி வரை இலவச உணவு தானியங்கள் உள்ளிட்டவைகளை செயல்படுத்துவது குறித்து ஆலோசனை நடத்த வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லேட்டஸ்ட் செய்திகள்
18 நாட்கள் 36 கதாபாத்திரங்கள்.. நாளை முதல் மோகன் லால் நடிக்கும் ‘எம்புரான்’ படத்தின் அப்டேட்.!
February 8, 2025![L2E EMPURAAN](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/L2E-EMPURAAN.webp)
அதிர்ச்சி மேல் அதிர்ச்சி! கெஜ்ரிவால் தோல்வி., மணீஷ் சிசோடியா தோல்வி!
February 8, 2025![Arvind Kejriwal - Manish sisodia](https://www.dinasuvadu.com/wp-content/uploads/2025/02/Arvind-Kejriwal-Manish-sisodia.webp)