7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செல்போன் டவர்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
நக்சலைட் ஆதிக்கம் மிகுந்த பகுதிகளில் 7 ஆயிரம் கோடி ரூபாய் செலவில் செல்போன் டவர்கள் அமைக்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. நக்சலைட்கள் ஆதிக்கம் மிகுந்த 10 பகுதிகளில் தொலைதொடர்பு நெட்வொர்க்கை வலுப்படுத்துவதற்காக 7 ஆயிரத்து 330 கோடி ரூபாய் செலவில் 4 ஆயிரத்து 72 செல்போன் டவர்கள் அமைக்க அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.
துருக்கியுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தின் படி கடுகு விதைகளை ஆண்டுதோறும் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யவும் அனுமதி அளிக்கப்பட்டது. பிரான்ஸ் நாட்டுடனான ஒப்பந்தத்தின்படி புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் ஆராய்ச்சி, திட்டத்தை செயல்படுத்தவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்ததுள்ளது.